Skip to main content

தனியுரிமை கொள்கை

Last updated: 12th August 2024

நாங்கள் (மொஹல்லா டெக் பிரைவேட் லிமிடெட், அல்லது "எம்டிபிஎல்") உங்கள் தனியுரிமை குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம், மேலும் இந்தக் கவலையை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். இந்த தனியுரிமைக் கொள்கை ("தனியுரிமைக் கொள்கை") எங்கள் மொபைல் பயன்பாடு மற்றும் அதன் பதிப்புகளை ("பயன்பாடு") நீங்கள் பயன்படுத்தும் போது உங்கள் தரவை நாங்கள் எவ்வாறு சேகரிக்கிறோம், செயலாக்குகிறோம், பயன்படுத்துகிறோம் மற்றும் வெளிப்படுத்தலாம் என்பதை அமைக்கிறது. செயலி, "ப்ளாட்ஃபார்ம்" என்று குறிப்பிடப்படுகிறது. "நாங்கள்", "எங்களின்" அல்லது "எங்களை" அல்லது "நிறுவனம்" என்பது ப்ளாட்ஃபார்ம் மற்றும்/அல்லது மொஹல்லா டெக் பிரைவேட் லிமிடெட் -ஐ குறிக்கும். "நீங்கள்", "உங்களின்" அல்லது "பயனர்" என்பது எங்களின் ப்ளாட்ஃபார்மைப் பயன்படுத்தும் எந்தவொரு நபரையும் அல்லது நிறுவனத்தையும் குறிக்கும். இந்தத் தனியுரிமை கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளதைத் தவிர வேறு யாருடனும் உங்களின் தகவல்களை நாங்கள் பகிரமாட்டோம் அல்லது பயன்படுத்த மாட்டோம்.

இந்தத் தனியுரிமை கொள்கை பயன்பாட்டு விதிமுறையின் ("விதிமுறைகள்") ஒரு அங்கமாகும், மேலும் இது பயன்பாட்டு விதிமுறையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டும். இந்தப் ப்ளாட்ஃபார்மைப் பயன்படுத்துவதன் மூலம், இந்தத் தனியுரிமை கொள்கையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். இந்தத் தனியுரிமை கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ள விதத்தில் உங்களின் தனிப்பட்ட தகவல்களை (கீழே வரையறுக்கப்பட்டுள்ளபடி) நாங்கள் பயன்படுத்தவும் வெளிப்படுத்தவும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். இந்தத் தனியுரிமை கொள்கையில் கொடுக்கப்பட்டு ஆனால் வரையறுக்கப்படாத அடர் எழுத்துகள், விதிமுறைகளில் அத்தகைய வார்த்தைகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அர்த்தத்தைக் கொண்டிருக்கும். இந்தத் தனியுரிமை கொள்கையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், இந்தப் ப்ளாட்ஃபார்மைப் பயன்படுத்த வேண்டாம்.

நாங்கள் சேகரிக்கும் தகவல்கள் மற்றும் அதை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம்#

நாங்கள் உங்களிடமிருந்து சேகரிக்கும் தகவல்களையும், அதை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதையும் பின்வரும் அட்டவணை பட்டியலிடுகிறது:

நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்அதை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம்
உள்நுழைவு தரவுகள்: பயனர் ID, மொபைல் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, பாலினம் (கட்டாயமற்றது) மற்றும் IP முகவரி. நீங்கள் எங்கள் ப்ளாட்ஃபார்ம் மற்றும் எங்கள் ப்ளாட்ஃபார்மின் சில அம்சங்களை அணுகுவதற்குத் தகுந்த வயதுடையவரா என்று சொல்லும் ஒரு குறிப்பு சார்ந்த வயது வரம்பை நாங்கள் சேகரிக்கலாம் (கூட்டாக "உள்நுழைவு தரவுகள்").

நீங்கள் பகிரும் உள்ளடக்கம்: நீங்கள் பகிரும் உள்ளடக்கம்: ப்ளாட்ஃபார்ம் மூலமாக மற்ற பயனர்களுக்கு நீங்கள் கிடைக்கச் செய்யும் அனைத்துத் தகவல்களும் இதில் அடங்கும், அதாவது:

- ஏதாவது மேற்கோள்கள், படங்கள், அரசியல் கருத்துகள், மதம் சார்ந்த கண்ணோட்டங்கள், சுயவிவர புகைப்படம், பயனரின் பயோ மற்றும் ஹேண்டில், ஒன்றுக்கொன்று தொடர்புடையவை உட்பட ஆனால் அவை மட்டுமல்லாமல், ப்ளாட்ஃபார்மில் உங்களால் தானாக முன்வந்து பகிரப்படும் உங்களைப் பற்றிய அல்லது உங்களுடன் தொடர்புடைய தகவல்கள்.
- ப்ளாட்ஃபார்மில் நீங்கள் செய்யும் எந்தவொரு இடுகைகளும்.

பிற மூலங்களிலிருந்து நாங்கள் பெறும் தகவல்கள்: நாங்கள் மூன்றாம் தரப்பினருடன் நெருக்கமாகப் பணியாற்றி (உதாரணத்திற்கு, வணிகக் கூட்டாளிகள், தொழில்நுட்பம்சார் துணை ஒப்பந்ததாரர், பகுப்பாய்வு வழங்குநர்கள், தேடல் தகவல் வழங்குநர்கள் உட்பட), அத்தகைய மூலங்களிலிருந்து உங்களைப் பற்றிய தகவல்களைப் பெறலாம். அத்தகைய தரவுகள் உள்ளேயே பகிரப்பட்டு, இந்தப் ப்ளாட்ஃபார்மில் சேகரிக்கப்பட்ட தரவுகளுடன் இணைக்கப்படலாம்.

பதிவு தரவுகள் "பதிவு தரவுகள்" என்பது, நீங்கள் ப்ளாட்ஃபார்மைப் பயன்படுத்தும் போது, பின்வருவன உட்பட ஆனால் அவை மட்டுமல்லாமல், குக்கீகள், வெப் பீகன்கள், பதிவு கோப்புகள், ஸ்கிரிப்ட்களைப் பயன்படுத்துவதன் மூலம், எங்களால் தானாகச் சேகரிக்கப்படும் தகவல்கள் ஆகும்:
- மொபைல் கேரியர் தொடர்புடைய தகவல்கள், உங்களின் வெப் ப்ரவுசஸரில் அல்லது ப்ளாட்ஃபார்மை அணுக நீங்கள் பயன்படுத்தும் மற்ற நிரல்களில் கிடைக்கும் உள்ளமைவு தகவல்கள், உங்களின் IP முகவரி மற்றும் உங்கள் சாதனத்தின் பதிப்பு மற்றும் அடையாள எண் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள்;
- பயன்படுத்தப்பட்ட இணையத் தேடல் சொற்கள், பார்வையிட்ட சமூக ஊடகச் சுயவிவரங்கள், பயன்படுத்தப்பட்ட சிறு செயலிகள் போன்று, ப்ளாட்ஃபார்மை பயன்படுத்தும் போது நீங்கள் எதைத் தேடினீர்கள் மற்றும் பார்வையிட்டீர்கள் என்பது குறித்த தகவல்கள் மற்றும் ப்ளாட்ஃபார்மை பயன்படுத்தும் போது உங்களால் மதிப்பிடப்பட்ட அல்லது கோரப்பட்ட மற்ற தகவல்கள் மற்றும் உள்ளடக்கத்தின் விவரங்கள்;
- நீங்கள் தொடர்புகொண்ட பயனரின் அடையாளம் மற்றும் உங்களின் தகவல்தொடர்புகளின் நேரம், தரவுகள் மற்றும் கால அளவு போன்று, ப்ளாட்ஃபார்மில் செய்யப்படும் தகவல் தொடர்புகளைக் குறித்த பொதுவான தகவல்கள்; மற்றும்
- மெட்டாடேட்டா, அதாவது, பகிரப்பட்ட புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கப்பட்ட அல்லது இடுகையிடப்பட்ட தேதி, நேரம் அல்லது இடம் போன்று, ப்ளாட்ஃபார்ம் மூலம் நீங்கள் கிடைக்கச் செய்தவற்றுடன் தொடர்புடைய தகவல்கள்.

குக்கீகள்: எங்கள் ப்ளாட்ஃபார்மின் மற்ற பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்தக் குக்கீகளை எங்கள் ப்ளாட்ஃபார்ம் பயன்படுத்துகிறது. எங்கள் ப்ளாட்ஃபார்மை நீங்கள் ப்ரவுஸ் செய்யும்போது உங்களுக்கு ஒரு நல்ல பயனர் அனுபவத்தை வழங்கவும், ப்ளாட்ஃபார்மை மேம்படுத்தவும் இது எங்களுக்கு உதவுகிறது. உங்கள் சாதனத்தில் உள்ள குக்கீகளிலிருந்து குக்கீ தரவுகளை நாங்கள் சேகரிக்கிறோம். நாங்கள் பயன்படுத்தும் குக்கீகள் குறித்த விரிவான தகவல்களுக்கு மற்றும் அவற்றை நாங்கள் பயன்படுத்தும் நோக்கங்களை அறிவதற்கு, எங்களின் குக்கீ கொள்கையைப் பார்க்கவும்.

கருத்தாய்வு: கருத்தாய்வில் கலந்துகொள்ள நீங்கள் தேர்வு செய்தால், சில தனிப்பட்ட தகவல்களை, அதாவது, உங்களை அடையாளம் காணப் பயன்படுத்தக்கூடிய ஏதாவது தகவலை ("தனிப்பட்ட தகவல்கள்") வழங்குமாறு நாங்கள் கோரலாம். இந்தக் கருத்தாய்வுகளை நடத்த நாங்கள் ஒரு மூன்றாம் தரப்பு சேவை வழங்குநரைப் பயன்படுத்தலாம், மேலும், கருத்தாய்வை முடிப்பதற்கு முன்னரே அது குறித்து உங்களிடம் தெரிவிக்கப்படும்.
- ப்ளாட்ஃபார்மில் ஒரு பயனர் கணக்கு உள்நுழைவை அமைப்பதற்காகவும் எளிதாக்கவும்;
- இந்தத் தனியுரிமை கொள்கை உட்பட, ப்ளாட்ஃபார்மில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து உங்களிடம் தெரிவிக்க;
- பயனர் ஆதரவின் ஏற்பாடு உட்பட, தகவல்தொடர்பை எளிமையாக்க;
- எங்களின் விதிமுறைகள், நிபந்தனைகள், மற்றும் கொள்கைகள் மற்றும் எங்களின் ஏதாவது உரிமைகள், அல்லது எங்களின் இணை நிறுவனம் அல்லது ப்ளாட்ஃபார்மின் மற்ற பயனர்களின் உரிமைகளை அமல்படுத்த;
- புதிய சேவைகளை உருவாக்க, ப்ளாட்ஃபார்ம் மற்றும் இருக்கும் சேவைகளை மேம்படுத்த மற்றும் பயனர் கருத்துகள் மற்றும் கோரிக்கைகளைச் சேர்க்க;
- மொழி மற்றும் இருப்பிடம் அடிப்படையிலான தனிப்பயனாக்கத்தை வழங்க;
- ப்ளாட்ஃபார்மை நிர்வகிக்கவும், பழுது நீக்கம், தரவுகள் பகுப்பாய்வு, சோதனை செய்தல், பாதுகாப்பு, மோசடியைக் கண்டறிதல், கணக்கு மேலாண்மை, மற்றும் கருத்தாய்வு நோக்கங்கள் உள்ளிட்ட, உள் செயல்பாடுகளுக்காகவும்;
- ப்ளாட்ஃபார்மை நீங்கள் எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் மற்றும் அணுகுகிறீர்கள் என்பதைச் சிறப்பாகப் புரிந்துகொள்வதற்காகவும், ப்ளாட்ஃபார்மில் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காகவும்;
- ப்ளாட்ஃபார்மை எங்களின் பயனர்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதைச் சிறப்பாகப் புரிந்துகொள்வதற்காக, வட்டாரம், தொலைபேசி மாதிரி, இயக்கு தளப் ப்ளாட்ஃபார்ம், கணினி மொழி, மற்றும் ப்ளாட்ஃபார்ம் பதிப்பு போன்றவற்றின் மீதான பயனர் எண்ணிக்கை சார்ந்த பகுப்பாய்வை நடத்துவதற்காக, தனிப்பட்ட தகவல்கள் உட்பட, உங்களின் தகவல்களுக்குப் புனைப்பெயரிடவும் மற்றும் அவற்றை மொத்தமாக்கவும்;
- ப்ளாட்ஃபார்மில் பயனர்கள் மூன்றாம் தரப்பு சேவைகளை அணுகும் போது எந்த உள்ளடக்கம் மற்றும் சேவைகள் பயன்படுத்தப்பட்டன என்பதின் இணையம் மற்றும் கணக்கு போக்குவரத்தின் சேகரிப்புக்காக, தனிப்பட்ட தகவல்கள் உட்பட, உங்களின் தகவல்களுக்குப் புனைப்பெயரிடவும் மற்றும் அவற்றை மொத்தமாக்கவும்;
- எங்களால் அல்லது குழுவால் இயக்கப்படும் தொடர்புடைய/சகோதரி தளங்களில் பிரதியெடுக்கும் சுயவிவரங்களைப் பதிவேற்ற அல்லது உருவாக்க;
- விளம்பரப்படுத்துதல் மற்றும் பிற சந்தைப்படுத்துதல் மற்றும் விளம்பர நடவடிக்கைகளின் செயல்திறனை மதிப்பிட மற்றும் மேம்படுத்த.
பயனர் தேடல் தரவுகள்: ப்ளாட்ஃபார்மில் உங்களால் செய்யப்படும் ஏதாவது தேடல்கள்.உங்களின் முந்தைய தேடல்களுக்கான விரைவான அணுகலை வழங்குவதற்காக. தனிப்பயனாக்கவும், உங்களுக்கு இலக்காக்கப்பட்ட விளம்பரங்களைக் காட்டுவதற்காகவும் பகுப்பாய்வுகளைப் பயன்படுத்த.
கூடுதல் கணக்கு பாதுகாப்பு: எங்கள் ப்ளாட்ஃபார்மில் பதிவு செய்யும்போது, நாங்கள் உங்களின் தொலைபேசி எண்ணைச் சேகரித்து, ஒரு முறை பயன்பாட்டு கடவுச்சொல்லை ("ஓடிபி") உங்களுக்கு அனுப்புவதன் மூலம் உங்கள் தொலைபேசியில் எஸ்.எம்.எஸ்-களை அணுகக் கோருவோம், உங்களின் அடையாளத்தைச் சரிபார்ப்பதற்காக ஓடிபி -ஐ உள்ளீடு செய்வதன் மூலம் நீங்கள் அதை உறுதி செய்யலாம்.உங்களின் அடையாளத்தைச் சரிபார்ப்பதற்காகவும், உங்களின் கணக்கு பாதுகாப்பைப் பராமரிப்பதற்காகவும். உருவாக்கப்பட்ட ஓடிபி -ஐ தானாகவே படிப்பதற்காக உங்களின் எஸ்எம்எஸ் ஃபோல்டருக்கான அணுகலை நாங்கள் கோருகிறோம்.
தொடர்புகள் பட்டியல்: உங்களின் மொபைல் சாதனத்தில் உள்ள தொடர்புகள் பட்டியலை நாங்கள் அணுகுவோம். எப்போதும் உங்கள் தொடர்புகள் பட்டியலை அணுகுவதற்கு முன்னர் உங்களின் ஒப்புதலை நாங்கள் கேட்போம், மேலும், உங்கள் தொடர்புகள் பட்டியலுக்கான எங்கள் அணுகலை மறுப்பதற்கான விருப்பத்தேர்வு உங்களுக்கு உள்ளது.பரிந்துரைகளை வழங்குவதற்கும், உங்களின் நண்பர்கள் மற்றும் பிற தொடர்புகளைப் ப்ளாட்ஃபார்முக்கு வரவேற்கவும், மேலும், ஏதேனும் தனிநபர் ப்ளாட்ஃபார்மில் சேரும்போது உங்களுக்குத் தெரிவிக்கவும்.
இருப்பிடத் தகவல்கள்: "இருப்பிடத் தரவுகள்" என்பது, உங்களின் GPS, IP முகவரி, மற்றும்/அல்லது இருப்பிடத் தகவல்களைக் கொண்ட பொது இடுகைகளிலிருந்து எடுக்கப்படும் தகவல்கள் ஆகும்.

ப்ளாட்ஃபார்மை நீங்கள் அணுகும்போது, எங்களுக்கும் மற்ற ப்ளாட்ஃபார்ம் பயனர்களுக்கும் சில இருப்பிடத் தகவல்களை நீங்கள் வெளிப்படுத்துவீர்கள், சேவைகளை வழங்குவதற்காக அல்லது உங்கள் கணக்கில் ஒன்றிற்கும் மேற்பட்ட உள்நுழைவுகள் இல்லை என்பதை உறுதி செய்வது போன்று, எங்கள் ப்ளாட்ஃபார்மை மேம்படுத்துவதற்காக, உங்களின் IP முகவரி, சாதனம், அல்லது இணையச் சேவையிலிருந்து இருப்பிடத் தகவல்களை நாங்கள் பெறுவோம்.
- பாதுகாப்பு, மோசடியைக் கண்டறிதல் மற்றும் கணக்கு மேலாண்மைக்காக;
- மேம்படுத்தப்பட்ட உள்ளடக்க இலக்காக்கலுக்காகப் பயன்படுத்தப்பட;
- நீங்கள் பயன்படுத்தத் தேர்ந்தெடுக்கும் இருப்பிடம் அடிப்படையிலான சேவைகளை உங்களுக்கு வழங்குவதற்காக:
- ப்ளாட்ஃபார்மில் அவ்வப்போது கிடைக்கக்கூடிய சிறு செயலிகள், அவை வழங்கும் சேவையின் அடிப்படையில் அவற்றிற்கு அத்தகைய தகவல்கள் தேவைப்படலாம் (ஏதேனும் சிறு செயலிக்கு உங்களின் இருப்பிடத்தை வெளிப்படுத்த நீங்கள் தேர்வு செய்தால்);
- மொழி மற்றும் இருப்பிடம் அடிப்படையிலான தனிப்பயனாக்கத்தை வழங்க.
வாடிக்கையாளர் ஆதரவு தகவல்கள்: அவ்வப்போது எங்களின் ப்ளாட்ஃபார்மைப் பயன்படுத்துவதற்காக உங்களுக்குத் தேவைப்படும் ஏதேனும் உதவி அல்லது ஆதரவு சம்பந்தப்பட்ட எங்களின் வாடிக்கையாளர் உதவி குழுவிடம் நீங்கள் வழங்கும் ஏதாவது தகவல்கள்.உங்களுக்கு ஆதரவு மற்றும் உதவியை வழங்க உதவுவதற்காக
சாதனத்தின் தரவுகள்: "சாதனத்தின் தரவுகளில்"
பின்வருவன மட்டுமல்லாமல் மற்றவையும் அடங்கும்:

§ சாதனத்தின் பண்புக்கூறுகள்: இயக்கு தளம், இயக்கு தளப் பதிப்பு மற்றும் மொழி, வன்பொருள் மற்றும் மென்பொருள் பதிப்புகள், சாதனத்தின் நிறுவனம் மற்றும் மாதிரி, திரை தெளிவுத்திறன், பேட்டரி அளவு, ஒற்றை வலிமை, சாதனத்தின் RAM, சாதனத்தின் பிட்விகிதம், கிடைக்கும் சேமிப்பு இடம், சாதனத்தின் CPU தொடர்பான தகவல்கள், ப்ரவுஸர் வகை, செயலி மற்றும் கோப்பின் பெயர்கள் மற்றும் வகைகள், மற்றும் ப்ளக்கின்கள்.

§ சாதனத்தின் செயல்பாடுகள்: ஒரு விண்டோ முன்புறம் இருக்கிறதா அல்லது பின்னணியில் இருக்கிறதா என்பதை என்பது போன்ற, சாதனத்தில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் மற்றும் நடத்தைகள் பற்றிய தகவல்கள்.

§ அடையாளங்காட்டிகள்: நீங்கள் பயன்படுத்தும் விளையாட்டுகள், செயலிகள் அல்லது கணக்குகளிலிருந்து கிடைப்பன போன்ற தனித்துவமான அடையாளங்காட்டிகள், சாதனத்தின் ஐடி-கள், விளம்பர ஐடி-கள், மற்றும் பிற அடையாளங்காட்டிகள்.

§ சாதனத்தின் சமிக்ஞைகள்: உங்களின் ப்ளூடூத் சமிக்ஞைகள், மற்றும் அருகில் உள்ள வை-ஃபை அணுகல் புள்ளிகள், பீகன்கள், மற்றும் செல் கோபுரங்கள் குறித்த தகவல்களை நாங்கள் சேகரிக்கலாம்.

§ சாதன அமைப்புகளிலிருந்து தரவுகள்: உங்களின் GPS இருப்பிடம், கேமரா அல்லது புகைப்படங்களுக்கான அணுகல்கள் போன்று, நீங்கள் ஆன் செய்யும் சாதன அமைப்புகளின் மூலமாக எங்களுக்குக் கிடைக்க நீங்கள் அனுமதிக்கும் தகவல்கள்.

§ நெட்வொர்க் மற்றும் இணைப்புகள்: உங்கள் மொபைல் ஆபரேட்டரின் பெயர் அல்லது ISP, நெட்வொர்க் வகை மற்றும் வேகம், தரவுகள் நுகர்வு, மொழி, நேர மண்டலம், மொபைல் தொலைபேசி எண், IP முகவரி மற்றும் இணைப்பு வேகம்.

§ செயலி மற்றும் செயலியின் பதிப்பு: உங்களின் மொபைல் சாதனத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஏதாவது மொபைல் செயலிகள்.

§ மீடியா: படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆடியோ கோப்புகள் உட்பட ஆனால் அவை மட்டுமல்லாமல், உங்கள் மொபைல் சாதனத்தில் உள்ள மீடியா கேலரி மற்றும் உங்கள் தொலைபேசியின் சேமிப்பு இடத்தை நாங்கள் அணுகுவோம். இருப்பினும், எப்போதும் உங்களின் படங்களை அணுகுவதற்கு முன்னர் உங்கள் ஒப்புதலை நாங்கள் பெறுவோம், மேலும், அத்தகைய அணுகலை மறுப்பதற்கான விருப்பத்தேர்வு உங்களுக்கு உள்ளது.

- ப்ளாட்ஃபார்மைப் பயன்படுத்தி எந்தவொரு வீடியோக்கள் மற்றும் படங்களின் பகிர்வையும் எளிதாக்குவதற்காக;
- உங்களின் மொபைல் சாதனத்திற்கு ஏற்றவாறு எங்கள் ப்ளாட்ஃபார்மைத் தனிப்பயனாக்க;
- கேமரா உள்ளமைவுகளின் நோக்கத்திற்காக;
- வாட்சாப் மற்றும்/அல்லது பேஸ்புக் மூலமாகப் பகிரும் நோக்கத்திற்காகப் ப்ளாட்ஃபார்மிலிருந்து எந்தவொரு உள்ளடக்கத்தையும் பதிவிறக்கம் செய்ய உங்கள் சாதனத்தில் போதுமான சேமிப்பு இடம் இருக்கிறதா என்று புரிந்துகொள்ள;
- எங்கள் ப்ளாட்ஃபார்மில் உங்களின் பயனர் அனுபவத்தை மேம்படுத்த;
- உகந்த பயனர் வீடியோ அனுபவத்தை வழங்க;
-உங்களின் மொபைல் சாதனத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் மூலமாகப் ப்ளாட்ஃபார்மில் உள்ள ஏதேனும் உள்ளடக்கத்தைப் பகிர்வதை எளிதாக்குவதற்காக;
- எங்கள் விதிமுறைகள், நிபந்தனைகள், மற்றும் கொள்கைகளை அமல்படுத்துவதற்காக உங்களின் அடையாளத்தைச் சரிபார்க்க;
- ப்ளாட்ஃபார்மை மேம்படுத்துவதற்காக.
- இருப்பிட உள்ளீடு நோக்கத்திற்காகப் பயன்படுத்த;
- பயனர் மொழி/தனிப்பயனாக்கத்தைப் பெற;
- கேமரா லென்ஸ்களின் தரத்தை மேம்படுத்த
கைபேசி அழைப்பு பதிவுகள் - ஓடிபி பதிவிற்கு மாற்றாக, மிஸ்டு கால் முறையின் மூலம் எங்கள் பயனர்கள் தங்கள் தொலைபேசி எண்ணை சரிபார்க்க வசதியாக, பயனரின் சாதனத்திலிருந்து அழைப்பு பதிவுகள் படிக்க அனுமதி கேட்கிறோம். பதிவு செய்யும்போது ஓடிபி விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டால் பயனர்கள் இந்த வழிமுறையை தேர்வு செய்கின்றனர்.பதிவு நோக்கங்களுக்காக
லென்ஸ்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக ஆப்பிளின் ட்ரூடெப்த் கேமராவிலிருந்தும் தகவல்களை நாங்கள் பயன்படுத்தலாம். ட்ரூடெப்த் கேமராவிலிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் நிகழ்நேரத்தில் பயன்படுத்தப்படுகின்றன, மேலும், இந்தத் தகவல்களை நாங்கள் எங்கள் சேவையகத்தில் சேமித்து வைப்பதில்லை. இந்தத் தகவல்கள் மூன்றாம் தரப்பினருடன் பகிரப்படாது

உங்களின் தகவல்களை வெளிப்படுத்துதல்#

பின்வரும் முறையில், உங்கள் தகவல்களை நாங்கள் வெளிப்படுத்துவோம்:

மற்றவர்களுக்குத் தெரியும் உள்ளடக்கம்#

பொது உள்ளடக்கம் அதாவது, ஒரு இடுகை கருத்து போன்று, உங்களின் பயனர் சுயவிவரத்தில் அல்லது வேறு பயனரின் சுயவிவரத்தில் நீங்கள் இடும் ஏதாவது உள்ளடக்கம், தேடுபொறி உட்பட அனைவராலும் அணுகக்கூடியதாக இருக்கும். உங்களின் சுயவிவர பக்கத் தகவல்கள் உட்பட, ப்ளாட்ஃபார்மில் இடுகையிடுவதற்காக நீங்கள் தானாக முன்வந்து வெளிப்படுத்தும் எந்தவொரு தகவல்களையும், யார் வேண்டுமானாலும் அணுகலாம். ப்ளாட்ஃபார்மில் பொதுநிலைபடுத்த நீங்கள் தேர்ந்தெடுக்கும் உள்ளடக்கத்தை நீங்கள் சமர்ப்பிக்கும் போது, இடுகையிடும் போது அல்லது பகிரும் பொது, அது மற்றவர்களாலும் மீண்டும் பகிரப்படலாம். அதை நீங்கள் யாரிடம் பகிரத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும், ஏனெனில் எங்கள் ப்ளாட்ஃபார்மில் உங்களின் நடவடிக்கைகளைப் பார்க்கக்கூடியவர்கள் எங்கள் ப்ளாட்ஃபார்மிலும் அதற்கு வெளியேவும் மற்றவர்களுடன் அதைப் பகிரத் தேர்ந்தெடுக்கலாம், நீங்கள் பகிர்ந்த பார்வையாளர்களுக்கு வெளியே உள்ளவர்கள் உட்பட.

உங்களின் புகைப்படத்தை இடுகையிடுவது அல்லது அவர்களின் ஏதாவது இடுகைகளில் உங்களை டே செய்வது போன்று, பயனர்கள் எங்கள் ப்ளாட்ஃபார்மைப் பயன்படுத்தி உங்களைப் பற்றிய உள்ளடக்கத்தை உருவாக்கலாம் மற்றும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் பார்வையாளர்களுடன் அதைப் பகிரலாம். எந்தவொரு சமூக ஊடகத் தளத்திலும் அல்லது மற்ற ஏதாவது இணையவழி அல்லது இணையமல்லாத ப்ளாட்ஃபார்மிலும் உள்ள பொது உள்ளடக்கம் அனைத்தையும் பகிர்வதற்கான உரிமை எங்களுக்கு உள்ளது. இந்தத் தனியுரிமை கொள்கையில் வெளிப்படையாக வழங்கப்பட்டிருந்தாலொழிய, பெயரில்லாததாக்கப்பட்ட முறை அடிப்படையில் தவிர, மூன்றாம் தரப்பினரிடம் உங்களின் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் வாடகைக்கு வழங்கவோ அல்லது விற்கவோ மாட்டோம்.

எங்களின் குழு நிறுவனங்களுடன் பகிர்தல்#

தாங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்களை எங்கள் குழுவின் எந்த உறுப்பினருடனும் நாங்கள் பகிர்ந்து கொள்ளலாம். "குழு" என்ற சொல், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எங்களால் கட்டுப்படுத்தப்படும் அல்லது எங்களைக் கட்டுப்படுத்தும் அல்லது எங்களுடன் பொதுவான கட்டுப்பாட்டில் உள்ள எந்தவொரு நிறுவனத்தையும் குறிக்கிறது.

மற்றவர்களுடன் நீங்கள் எதைப் பகிர்கிறீர்கள்#

நீங்கள் எங்களின் ப்ளாட்ஃபார்மைப் பயன்படுத்தி உள்ளடக்கத்தைப் பகிரும் போது மற்றும் தகவல் தொடர்பில் ஈடுபடும் போது, அத்தகைய உள்ளடக்கத்தைப் பார்க்கக்கூடிய பார்வையாளர்களை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள். உதாரணத்திற்கு, எங்களின் ப்ளாட்ஃபார்மிலிருந்து பேஸ்புக்கில் ஏதேனும் உள்ளடக்கத்தை நீங்கள் இடுகையிடும்போது, ஒரு நண்பர், ஒரு நண்பர்கள் குழு அல்லது உங்களின் நண்பர்கள் அனைவரும் என்று, இடுகைக்கான பார்வையாளர்களை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள். அதே போல், எங்கள் ப்ளாட்ஃபார்மில் உள்ளடக்கத்தைப் பகிர உங்களின் மொபைல் சாதனத்தில் உள்ள வாட்சாப் அல்லது மற்ற ஏதாவது செயலியை நீங்கள் பயன்படுத்தும் போது, உள்ளடக்கத்தை யாரிடம் பகிர வேண்டும் என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள். அத்தகைய நபர்களுடன் நீங்கள் பகிரும் தகவல்களை அவர்கள் (ப்ளாட்ஃபார்மில் கிடைக்கும் வாட்சாப் அல்லது பேஸ்புக் போன்ற ஏதேனும் பகிர்தல் விருப்பத்தேர்வுகளைப் பயன்படுத்தி உள்ளடக்கத்தை நீங்கள் பகிர்ந்துகொள்ள உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்) பயன்படுத்தும் விதத்தை நாங்கள் கட்டுப்படுத்துவதில்லை, மேலும், நாங்கள் அதற்குப் பொறுப்பாக மாட்டோம்.

மூன்றாம் தரப்பினருடன் பகிர்தல்#

பின்வருவன உட்பட, தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாம் தரப்பினரிடம் உங்கள் தகவல்களை (தனிப்பட்ட தகவல்கள் உட்பட) நாங்கள் பகிரலாம்:

  • வணிக பங்காளிகள், சப்ளையர்கள் மற்றும் துணை ஒப்பந்ததாரர்கள் ("இணை நிறுவனங்கள்"). சேவை மற்றும் துணை நிறுவனங்களின் சொந்த சேவைகளை வழங்க, புரிந்துகொள்ள மற்றும் மேம்படுத்த உதவுவதற்கு துணை நிறுவனங்கள் இந்தத் தகவலைப் பயன்படுத்தலாம்.
  • உங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஏற்ற விளம்பரங்களைத் தேர்ந்தெடுத்து வழங்குவதற்கான தரவுகள் தேவைப்படும் விளம்பரதாரர்கள் மற்றும் விளம்பர நெட்வொர்க்குகள். அடையாளம் காணக்கூடிய தனிநபர் குறித்த தகவல்களை எங்கள் விளம்பரதாரரிடம் நாங்கள் வெளிப்படுத்தமாட்டோம், ஆனால் எங்கள் பயனர்கள் குறித்த கூட்டு தகவல்களை நாங்கள் அவர்களுக்கு வழங்கலாம் (உதாரணத்திற்கு, ஏதேனும் எண்ணிக்கையிலான ஒரு குறிப்பிட்ட வயது குழுவைச் சேர்ந்த பெண்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் அவர்களது விளம்பரத்தைக் க்ளிக் செய்தார்கள் என்று நாங்கள் அவர்களிடம் தெரிவிக்கலாம்). விளம்பரதாரர்கள் குறிவைக்க விரும்பும் பார்வையாளர்களை அடைய அவர்களுக்கு உதவ அத்தகைய கூட்டு தகவல்களை நாங்கள் பயன்படுத்தலாம்.
  • ஏதேனும் சட்டக் கடமை அல்லது ஏதேனும் அரசாங்கக் கோரிக்கையுடன் இணக்க; உரிமைகளைப் பாதுகாக்க அல்லது சொத்துக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் தடுக்க, அல்லது நிறுவனம், எங்கள் வாடிக்கையாளர், அல்லது பொதுமக்களின் பாதுகாப்புக்காக; அல்லது பொதுப் பாதுகாப்பு, மோசடி, பாதுகாப்பு அல்லது தொழில்நுட்பப் பிரச்சனைகளைத் தடுக்க அல்லது தீர்த்து வைக்க, உங்களின் தனிப்பட்ட தரவுகளை அல்லது தகவல்களைப் பகிர வேண்டிய நியாயமான தேவை உள்ளது என்று நாங்கள் நன்னம்பிக்கை கொண்டிருந்தால், அரசு அமைப்புகள் அல்லது சட்ட அமலாக்க முகமைகளிடம் நாங்கள் பகிரலாம்.

பின்வரும் சூழ்நிலைகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாம் தரப்பினரிடம் உங்கள் தகவல்களை (தனிப்பட்ட தகவல்கள் உட்பட) நாங்கள் வெளிப்படுத்தலாம்:

  • நிறுவனம் மற்றும் அதைத் தொடர்ந்து அதன் அனைத்துச் சொத்துகளும் ஒரு மூன்றாம் தரப்பால் கையகப்படுத்தப்பட்டால், அதன் வாடிக்கையாளர்கள் குறித்து அது வைத்திருக்கும் தனிப்பட்ட தரவுகளும் உரிமை மாற்றம் செய்யப்பட்ட சொத்துகளில் ஒன்றாகும். இணைப்பு, கையகப்படுத்தல், திவால், மறுசீரமைப்பு, அல்லது சொத்துகளை விற்பது போன்றவற்றில் நாங்கள் ஈடுபட்டு அதனால் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் வேறொரு தனியுரிமை கொள்கைக்கு மாற்றப்பட்டால் அல்லது உட்படுத்தப்பட்டால், நாங்கள் முன்கூட்டியே உங்களிடம் அதைத் தெரிவிப்போம், இதனால் உரிமை மாற்றத்திற்கு முன்னால் உங்கள் கணக்கை நீக்குவதன் மூலமாக ஏதேனும் அத்தகைய புதிய கொள்கையிலிருந்து நீங்கள் விலகலாம்.
  • எங்களின் விதிமுறைகள் மற்றும்/அல்லது பிற எந்தவொரு ஒப்பந்தங்களையும் அமல்படுத்துவதற்காகவும் பயன்படுத்துவதற்காகவும்.

பாதுகாப்பு நடைமுறைகள்#

எங்களால் சேகரிக்கப்படும் தகவல்களைப் பாதுகாக்கப் பொருத்தமான தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எங்களிடம் உள்ளன. ப்ளாட்ஃபார்மை நீங்கள் அணுக உதவும் ஒரு பயனர் பெயரை நாங்கள் உங்களிடம் வழங்கியுள்ள இடத்தில் (அல்லது நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள இடத்தில்), இந்த விவரங்களை இரகசியமாக வைப்பது உங்களுடைய பொறுப்பாகும். உங்களின் கடவுச்சொல்லை யாரிடமும் பகிர வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

உங்களின் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் எங்குச் சேமிப்போம்#

அமேசான் வெப் சர்வீஸஸ் இங் -ஆல் (தலைமை அலுவலகம், 410 டெர்ரி அவென்யூ, வடக்கு சியாட்டில், வாஷிங்டன் 98109, USA) வழங்கப்பட்ட அமேசான் வெப் சர்வீஸஸ் க்ளவுட் ப்ளாட்ஃபார்ம் மற்றும் கூகிள் LLC -ஆல் (தலைமை அலுவலகம், 1101, தெற்கு மலர் வீதி, பர்பாங்க், கலிபோர்னியா 91502, USA) வழங்கப்படும் கூகிள் க்ளவுட் ப்ளாட்ஃபார்முடன், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள அவற்றின் சேவையகங்களில் உங்கள் தரவுகளை நாங்கள் சேமிக்கிறோம். அமேசான் வெப் சர்வீஸஸ் மற்றும் கூகிள் க்ளவுட் ப்ளாட்ஃபார்ம் ஆகிய இரண்டும், தகவல்களின் இழப்பு, தவறான பயன்பாடு மற்றும் திருத்தி அமைத்தலைப் பாதுகாக்க, பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தும், அது குறித்த விவரங்கள் https://aws.amazon.com/ மற்றும் https://cloud.google.com -இல் கிடைக்கும். அமேசான் வெப் சர்வீஸஸ் மற்றும் கூகிள் க்ளவுட் ப்ளாட்ஃபார்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தனியுரிமை கொள்கைகள் https://aws.amazon.com/privacy/?nc1=f_pr மற்றும் https://policies.google.com/privacy -இல் கிடைக்கும்.

இந்த கொள்கையில் செய்யப்படும் மாற்றங்கள்#

இந்தத் தனியுரிமை கொள்கையை நிறுவனம் அவ்வப்போது புதுப்பிக்கலாம். இந்த தனியுரிமை கொள்கையில் நாங்கள் ஏதேனும் மாற்றங்களைச் செய்யும்போதெல்லாம் நீங்கள் அதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் இருக்கும் போது, புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கையை நாங்கள் இந்தத் லிங்க்கில் இடுவோம்.

பொறுப்புத் துறப்பு#

எதிர்பாராதவிதமாக, இணையம் வழியாகத் தகவல்களை அனுப்புவது எப்போதும் முற்றிலும் பாதுகாப்பானதாக இருக்காது. உங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்வோம் என்றாலும், ப்ளாட்ஃபார்முக்கு அனுப்பப்படும் உங்கள் தரவுகளின் பாதுகாப்பிற்கு எங்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது; எந்தவொரு அனுப்புகையும் உங்கள் சொந்த இடரின் அடிப்படையிலேயே இருக்கும். நாங்கள் உங்களின் தகவல்களைப் பெற்றவுடன், எங்களால் முடிந்த அளவுக்கு அங்கீகாரமற்ற அணுகலைத் தடுக்கும் கண்டிப்பான நடைமுறைகளையும் பாதுகாப்பு அம்சங்களையும் நாங்கள் பயன்படுத்துவோம்.

உங்கள் உரிமைகள்#

உங்களின் பயனர் கணக்கு/சுயவிவரம் மற்றும் உங்களின் கணக்கு/சுயவிவரத்திலிருந்து உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான அல்லது நீக்குவதற்கான உரிமை உங்களுக்கு உள்ளது. இருப்பினும், எங்கள் ப்ளாட்ஃபார்மில் உங்கள் செயல்பாடுகள் மற்றும் கணக்கின் வரலாறு எங்களுக்குத் தொடர்ந்து கிடைக்கும், எங்களின் தரவுத் தக்கவைப்புக் கொள்கைகளின்படி உங்கள் கணக்கு அல்லது உள்ளடக்கத்தை நாங்கள் நீக்குவது உட்பட.

உள்நுழைந்து உங்களின் சுயவிவர பக்கத்தைப் பார்வையிடுவதன் மூலம் உங்கள் கணக்கிலிருந்து தனிப்பட்ட தகவல்களை நீங்கள் திருத்தலாம், சேர்க்கலாம அல்லது நிக்கலாம். மேலே குறிப்பிட்டுள்ளபடி, செய்தியில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் எங்களிடமிருந்து தேவையற்ற மின்னஞ்சல் தகவல்தொடர்புகளைப் பெறுவதிலிருந்து நீங்கள் விலகலாம். இருப்பினும், உங்களின் கணக்கு நீக்கப்படும் வரை கணினி அமைப்பு மின்னஞ்சல்கள் அனைத்தையும் நீங்கள் தொடர்ந்து பெறுவீர்கள்.தளத்திலிருந்து இருந்து உங்கள் கணக்கை நீக்குவதற்கும், பயனர் தரவை அகற்றுவதற்கும், தயவுசெய்து உங்கள் ஆப்ஸின் அமைப்புகளுக்குச் சென்று, 'கணக்கு நீக்கக் கோரிக்கை'/'எனது தரவை நீக்கு' விருப்பத்தை கிளிக் செய்யவும். மேலும் தகவலுக்கு, கணக்கு நீக்குதலில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைப் பார்க்கவும் மற்றும் எங்கள் தரவு தக்கவைப்பு கொள்கைகள்.

தரவுகளைத் தக்கவைத்தல்#

உங்கள் முக்கியமான தனிப்பட்ட தகவலை (இதில் தெரிவித்துள்ளோம்) சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தப்படும் நோக்கங்களுக்காகத் தேவைப்படுவதை விட நீண்ட காலத்திற்கு நாங்கள் வைத்திருக்க மாட்டோம். இதில் நீங்கள் உருவாக்கிய வேறு எந்த வீடியோ/படமும் பதிவேற்றப்பட்ட நாளிலிருந்து 180 நாட்கள் வரை சேமிக்கப்படும். 180 நாட்கள் கழிந்த பிறகு, அத்தகைய பயனர் உள்ளடக்கங்கள் அனைத்தும் தானாகவே நீக்கப்படும். இருப்பினும், குறிப்பிட்ட மூன்றாம் தரப்பினருடனான ஒப்பந்தத்தை நிறைவேற்றுதல், பிளாட்ஃபார்மின் வணிக நோக்கங்கள், பிளாட்ஃபார்மில் வழங்கப்படும் தயாரிப்புகளை வழங்குதல் மற்றும் பொருந்தக்கூடிய சட்டத்திற்கு இணங்க, 180 நாள் தக்கவைப்பு காலத்திற்கு பிறகு உள்ளடக்கத்தை நாங்கள் வைத்திருக்கலாம்.180 நாள் தக்கவைப்பு காலத்திற்கு பிறகு அத்தகைய உள்ளடக்கத்தின் நகல்களை உருவாக்குவதற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பாவீர்கள். உங்கள் கணக்கை நீக்கவும் நீங்கள் தேர்வு செய்யலாம். மேலும், செயலற்ற தன்மை காரணமாக உங்கள் கணக்கு தானாகவே நீக்கப்பட்டிருக்கலாம். பிளாட்ஃபார்மின் தற்காலிகச் சேமிப்பு மற்றும் காப்பகப்படுத்தப்பட்ட பக்கங்களில் அல்லது பிற பயனர்கள் அந்தத் தகவலை நகலெடுத்தாலோ அல்லது சேமித்திருந்தாலோ, ஏதேனும் பொது உள்ளடக்கத்தின் நகல்கள் எங்கள் அமைப்புகளில் தக்கவைக்கப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. கூடுதலாக, இணையத்தின் தன்மை காரணமாக, உங்கள் கணக்கிலிருந்து நாங்கள்/நீங்கள் நீக்கிய அல்லது நீக்கிய போஸ்ட உட்பட, உங்கள் உள்ளடக்கத்தின் நகல்களும் இணையத்தில் வேறு எங்கும் இருக்கலாம் மற்றும் காலவரையின்றி சேமிக்கப்படும். "உங்கள் உணர்திறன் தனிப்பட்ட தகவல்" என்பது பாஸ்வர்ட் மற்றும் விதிகளின் பிரிவு 3 இன் கீழ் உணர்திறன் வாய்ந்ததாக வகைப்படுத்தப்பட்ட பிற தகவல்களைக் குறிக்கும்.

மூன்றாம் தரப்பு லிங்க்குகள்#

ப்ளாட்ஃபார்ம், அவ்வப்போது, எங்கள் கூட்டாளி நெட்வொர்க், விளம்பரதாரர்கள், துணை நிறுவனங்கள் ஆகியவற்றின் வலைதளங்கள் மற்றும்/அல்லது மற்ற ஏதாவது வலைதளங்கள் அல்லது மொபைல் செயலிகள் ஆகியவற்றுக்கான மற்றும் ஆகியவற்றிலிருந்து லிங்க்குகளைக் கொண்டிருக்கும். லிங்க்கைப் பின்தொடர்ந்து ஏதாவது இந்த வலைதளங்களுக்கு நீங்கள் சென்றால், இந்த வலைதளங்கள் சொந்தத் தனியுரிமை கொள்கையை வைத்திருக்கும் என்பதையும், இந்தக் கொள்கைகளுக்கு நாங்கள் எந்தவிதப் பொறுப்பையும் ஏற்கமாட்டோம் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்த வலைதளங்கள் அல்லது மொபைல் செயலிகளிடம் ஏதேனும் தனிப்பட்ட தகவல்களை நீங்கள் சமர்ப்பிப்பதற்கு முன்னர் இந்தக் கொள்கைகளைச் சரிபார்க்கவும்.

இசை லேபிள்கள்#

ஆப் ஒரு குறுகிய வீடியோ தளமாக இருப்பதால், பிளாட்ஃபார்மில் உகந்த பயனர் அனுபவத்தை உறுதி செய்வதற்காக பல்வேறு இசை லேபிள்களுடன் இசை உரிம ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளோம். இசை தரவுகளுடன் தொடர்புடைய தகவல்கள், அவ்வப்போது பெயரில்லாததாக்கப்பட்ட முறையில் அத்தகைய இசை லேபிள்களுடன் பகிரப்படலாம்.

மூன்றாம் தரப்பு உட்பொதிப்புகள் மற்றும் சேவைகள்#

மூன்றாம் தரப்பு உட்பொதிப்புகள் மற்றும் சேவைகள் என்றால் என்ன?#

பிளாட்ஃபார்மில் காட்டப்படும் சில உள்ளடக்கங்கள் பிளாட்ஃபார்ம் மூலம் ஹோஸ்ட் செய்யப்படவில்லை. இந்த "உட்பொதிப்புகள்" மூன்றாம் தரப்பினரால் ஹோஸ்ட் செய்யப்பட்டு பிளாட்ஃபார்மில் உட்பொதிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக: YouTube அல்லது Vimeo வீடியோக்கள், Imgur அல்லது Giphy gifகள், SoundCloud ஆடியோ கோப்புகள், Twitter ட்வீட்கள் அல்லது பிளாட்ஃபார்மில் ஒரு பதிவில் தோன்றும் Scribd ஆவணங்கள். இந்தக் கோப்புகள், ஹோஸ்ட் செய்யப்பட்ட தளத்திற்கு நீங்கள் நேரடியாகப் பார்வையிடுவது போல் தரவை அனுப்பும் (எடுத்துக்காட்டாக, தளத்தில் உட்பொதிக்கப்பட்ட YouTube வீடியோவை பதிவுசெய்யும் பொது, உங்கள் செயல்பாடு குறித்த தரவை YouTube பெறுகிறது).

தளத்தில் சில அம்சங்களை உங்களுக்கு வழங்குவதற்காக, சுயாதீனமாகத் தரவைச் சேகரிக்கும் மூன்றாம் தரப்புச் சேவைகளுடன் நாங்கள் கூட்டாளியாக இருக்கிறோம். இந்த மூன்றாம் தரப்பு சேவைகளின் பயன்பாட்டு விதிமுறைகள், நீங்கள் அவற்றை தளத்தில் அணுகும்போது உங்களுக்கு அறிவிக்கப்படலாம். எடுத்துக்காட்டாக, லென்ஸ் போன்ற ஆப் இல் சில அம்சங்களைப் பயன்படுத்துவதற்கு வசதியாக Snap Inc. உங்கள் முக படங்களைச் சேகரித்துச் சேமிக்கலாம், அவற்றின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அத்தகைய சேகரிப்புக்கு முன் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.(https://snap.com/en-US/privacy/privacy-policy மற்றும் https://snap.com/en-US/terms இல் கிடைக்கும்)

மூன்றாம் தரப்பு உட்பொதிப்புகள் மற்றும் சேவைகளுடன் தனியுரிமை கோரிக்கைகள்#

மூன்றாம் தரப்பினர் என்ன தரவைச் சேகரிக்கிறார்கள் அல்லது அதை அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை இயங்குதளம் கட்டுப்படுத்தாது. எனவே, இயங்குதளத்தில் உள்ள மூன்றாம் தரப்பு உட்பொதிப்புகள் மற்றும் சேவைகள் இந்த தனியுரிமைக் கொள்கையின் கீழ் வராது. அவை மூன்றாம் தரப்பு சேவையின் தனியுரிமைக் கொள்கையில் அடங்கும். அத்தகைய உட்பொதிக்கப்பட்ட அல்லது API சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், மூன்றாம் தரப்பினரின் சேவை விதிமுறைகளுக்குக் கட்டுப்படுவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.

மூன்றாம் தரப்பு உட்பொதிப்புகள் மற்றும் API சேவைகளைப் பயன்படுத்துவதற்குப் பொருந்தக்கூடிய மூன்றாம் தரப்புக் கொள்கைகளின் பட்டியல்:#

பிளாட்ஃபார்மில் பயன்படுத்தப்படும் தற்போதைய மூன்றாம் தரப்பு API சேவைகளின் முழுமையற்ற பட்டியலைக் கீழே காணவும்:

  • YouTube API சேவைகள் இங்கே இருக்கும் கொள்கைகளால் நிர்வகிக்கப்படுகின்றன: https://www.youtube.com/t/terms
  • Snap Inc. சேவைகள் இங்கு இருக்கும் சேவை விதிமுறைகளால் நிர்வகிக்கப்படுகின்றன: https://snap.com/en-US/terms

கொள்கைகளின் பொருந்தக்கூடிய தன்மையில் ஏதேனும் முரண்பாடு அல்லது முரண்பாடு ஏற்பட்டால், அத்தகைய மூன்றாம் தரப்பினரின் சேவை விதிமுறைகள் மூன்றாம் தரப்பு தயாரிப்பு/சேவைகளின் பயன்பாட்டை நிர்வகிக்கும் மற்றும் MTPL இயங்குதளக் கொள்கைகள் தளத்தில் இருக்கும் உள்ளடக்கம் மற்றும் MTPL வழங்கும் சேவைகளை நிர்வகிக்கும்.

மூன்றாம் தரப்பு உட்பொதிப்புகளுடன் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுதல்#

சில உட்பொதிப்புகள், ஒரு படிவம் மூலமாக, உங்களின் மின்னஞ்சல் முகவரி போன்ற தனிப்பட்ட தகவல்களை உங்களிடம் கேட்கலாம். மோசமான செயல்பாட்டாளர்களைப் ப்ளாட்ஃபார்மிலிருந்து தள்ளி வைக்க எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்கிறோம். மேலே விளக்கிய படி, அவற்றின் செயல்கள் இந்தத் தனியுரிமை கொள்கையின் கீழ் வராது. எனவே, ப்ளாட்ஃபார்மில் உங்களின் மின்னஞ்சல் முகவரி அல்லது மற்ற ஏதாவது தனிப்பட்ட தகவல்களைக் கேட்கும் உட்பொதிக்கப்பட்ட படிவங்களை நீங்கள் பார்க்கும் போது கவனமாக இருக்கவும். உங்களின் தகவல்களை யாரிடம் பகிர்கிறீர்கள் என்பதையும், அதை வைத்து அவர்கள் என்ன செய்யத் திட்டமிட்டிருப்பதாகக் கூறுகிறார்கள் என்பதையும் நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உட்பொதிக்கப்பட்ட படிவம் மூலமாக எந்தவொரு மூன்றாம் தரப்பிடமும் தனிப்பட்ட தகவல்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டாம் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

உங்களின் சொந்த மூன்றாம் தரப்பு உட்பொதிப்பை உருவாக்குதல்#

தனிப்பட்ட தகவல்களைச் சமர்ப்பிக்கப் பயனர்களை அனுமதிக்கும் ஒரு படிவத்தை நீங்கள் உட்பொதித்தால், சேகரிக்கப்படும் தகவல்களை நீங்கள் எவ்வாறு பயன்படுத்த நினைக்கிறீர்கள் என்பதைத் தெளிவாகக் குறிப்பிடும் பொருந்தக்கூடிய தனியுரிமை கொள்கைக்கான ஒரு முக்கியமான லிங்க்கை, உட்பொதிக்கப்பட்ட படிவத்தின் அருகில் நீங்கள் வழங்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், நிறுவனம் அந்த இடுகையை முடக்க அல்லது உங்களின் கணக்கிற்கு வரம்பிடுவதற்கான அல்லது முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க அது வழிவகுக்கும்.

எங்களிடமிருந்து வரும் தகவல்தொடர்பு#

நாங்கள் அவசியமென்று கருதும்போது (பராமரிப்பிற்காகப் ப்ளாட்ஃபார்மை தற்காலிகமாக நாங்கள் நிறுத்தி வைத்திருக்கும்போது, அல்லது பாதுகாப்பு, தனியுரிமை, அல்லது நிர்வாகம் தொடர்புடைய தகவல்தொடர்புகள் போன்று) சேவை தொடர்புடைய அறிவிப்புகளை நாங்கள் அவ்வப்போது அனுப்பலாம். நாங்கள் இவற்றை எஸ்எம்எஸ் மூலமாக உங்களுக்கு அனுப்புவோம். இந்தச் சேவை தொடர்புடைய அறிவிப்புகளிலிருந்து நீங்கள் விலகக்கூடாது, ஏனெனில் இவை விளம்பர இயல்புடையதல்ல, மேலும், இவை உங்கள் கணக்கைப் பாதுகாக்கவும், ப்ளாட்ஃபார்மில் முக்கியமான மாற்றங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்தவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

குறை தீர்க்கும் அதிகாரி#

தரவு பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் பிளாட்ஃபார்ம் பயன்பாட்டுக் கவலைகள் தொடர்பான உங்கள் கவலைகளை நிவர்த்தி செய்ய எங்களிடம் ஒரு குறைதீர்ப்பு அதிகாரி இருக்கிறார். உங்களால் எழுப்பப்படும் பிரச்சனையை, பெறப்பட்ட 15 (பதினைந்து) நாட்களுக்குள் நாங்கள் தீர்த்து வைப்போம். பின்வரும் எந்தவொரு முறையிலும், எங்களின் குறை தீர்க்கும் அதிகாரியான மிஸ். ஹர்லீன் சேத்தி என்பவரை நீங்கள் தொடர்புகொள்ளலாம்:
முகவரி: மொஹல்லா டெக் பிரைவேட் லிமிடெட்,
நார்த் டவர் ஸ்மார்ட்வொர்க்ஸ், வைஷ்ணவி டெக் பார்க்,
சர்வே எண் 16/1 & எண் 17/2 அம்பலிபுரா கிராமம், வர்தூர் ஹோப்ளி,
பெங்களூரு நகர்ப்புறம், கர்நாடகா - 560103
மின்னஞ்சல்: grievance@sharechat.co
குறிப்பு - தயவுசெய்து பயனர் தொடர்பான அனைத்து குறைகளையும் விரைவாகச் செயல்படுத்தவும் தீர்க்கவும் மேலே குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல்-க்கு அனுப்புங்கள்.

தொடர்புகொள்ள வேண்டிய நபர் - மிஸ். ஹர்லீன் சேத்தி
மின்னஞ்சல்: nodalofficer@sharechat.co
குறிப்பு - இந்த மின்னஞ்சல் காவல்துறை மற்றும் விசாரணை நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக மட்டுமே. பயனர் தொடர்பான சிக்கல்களுக்கான சரியான மின்னஞ்சல் இதுவல்ல. பயனர் தொடர்பான அனைத்து குறைகளுக்கும், எங்களை grievance@sharechat.co இல் தொடர்பு கொள்ளவும்.