Skip to main content

கிரியேட்டர் ரெஃபரெல் டெர்ம்ஸ்

Last updated: 14th February 2023

மோஹல்லா டெக் பிரைவேட் லிமிடெட் (“நாங்கள்”, “MTPL”, “நாம்”) வழங்கும் மோஜ் கிரியேட்டர்கள் பரிந்துரைத் திட்டம் (“திட்டம்”) என்பது மோஜ் ஃபார் கிரியேட்டர்ஸ் (“MFC”) திட்டத்திற்காக விண்ணப்பிப்பதன் மூலமாக எங்களது மொபைல் செயலியான “மோஜ்” மற்றும் அதன் பதிப்புகளில் கிரியேட்டர்களாக ஆவதற்கு உங்கள் நண்பர்கள், சகப் பணியாளர்கள் மற்றும் குடுபத்தினரை (“அழைக்கப்படுவோர்”) குறிப்பிடுவதற்காக அல்லது பரிந்துரைப்பதற்காக உங்களுக்கு (“நீங்கள்”/ “பரிந்துரை செய்பவர்”) ரிவார்டுகள் வழங்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (“விதிமுறைகள்”) எனப்படுபவை உங்களுக்கும் MTPL -க்கும் இடையிலான ஒரு பிணைப்பு ஒப்பந்தமாகும் மேலும் இது இத்திட்டத்தில் உங்களது பங்கேற்பினை நிர்வகிக்கும். இந்த திட்டத்தில் பங்கேற்பதன் மூலம், நீங்கள் தளத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைக்கு ஒப்புக்கொள்கிறீர்கள். இந்த திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், நீங்கள் இந்த திட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டீர்கள். எந்த வித முன்னறிவிப்பும் இன்றி திட்டத்தின் எந்த அம்சத்தையும் அல்லது திட்டத்தை முழுமையாக மாற்ற, ரத்து செய்ய, நிறுத்தி வைக்க அல்லது திருத்தியமைக்கும் தனிப்பட்ட உரிமை MTPL -க்கு உள்ளது. எந்த பயனரையும் அல்லது வருங்காலப் பயனரையும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் பங்கேற்பதில் இருந்து தகுதி நீக்கம் செய்யும் உரிமையும் MTPL -க்கு உண்டு.

தகுதி:#

இந்த திட்டத்தில் பங்கேற்க தகுதி பெறுவதற்கு, பரிந்துரை செய்பவர் தளத்தின் பதிவு செய்த பயனராக இருக்க வேண்டும்.

தகுதி பெற்ற பரிந்துரை:#

ஒரு “தகுதிபெற்ற பரிந்துரை” என்பது கீழே-குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்:

  • பரிந்துரை செய்பவர் பகிர்ந்துகொண்ட பரிந்துரை இணைப்பில் கிளிக் செய்த 7 நாட்களுக்குள் அழைக்கப்பட்டவர் MFC க்கு விண்ணப்பித்து, MTPL அணியினர் மூலமாக மதிப்பாய்வு செய்யப்படும்போது ஒரு MFC கிரியேட்டராக தேர்வு செய்யப்படுதல்
  • பரிந்துரை செய்பவர் பகிர்ந்துகொண்ட பரிந்துரை இணைப்பில் அழைக்கப்பட்டவர் கிளிக் செய்யவில்லை என்றால், அழைக்கப்பட்டவர் MFCக்கு தேர்வு செய்யப்பட்டாலும் அது தகுதிபெற்ற பரிந்துரையாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது
  • பரிந்துரை இணைப்பில் கிளிக் செய்த 7 நாட்களுக்குள் அழைக்கப்பட்டவர் MFC திட்டத்தில் பங்கேற்கவில்லை என்றால், அது தகுதிபெற்ற பரிந்துரையாக எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது
  • அழைக்கப்பட்ட ஒருவர் ஏற்கெனவே MFC திட்டத்தில் பங்கேற்றிருந்தால் அல்லது ஏற்கெனவே ஒரு MFC கிரியேட்டர் என்றால், அது ஒரு தகுதிபெற்ற பரிந்துரையாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது
  • அழைக்கப்பட்டவர், MFC திட்டத்திற்கு விண்ணப்பித்த பின்னர் MTPL இன் உள் மதிப்பாய்வு அணியினர் மூலமாக திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் வகையில் தேர்வு செய்யப்படவில்லை என்றால், அது தகுதிபெற்ற பரிந்துரையாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
  • அழைக்கப்பட்டவர், மற்றொரு பரிந்துரை செய்தபவர் மூலமாக பரிந்துரை செய்யப்பட்டிருந்தால், அது ஒரு தகுதிபெற்ற பரிந்துரையாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது
  • ஒரு தகுதிபெற்ற பரிந்துரை மட்டுமே அனுமதிக்கப்படும், அதாவது ஒரு பரிந்துரை செய்பவர் ஒரு அழைக்கப்பட்டவருக்காக ரிவார்டு பெற்றுவிட்டார் என்றால், அதே அழைக்கப்பட்ட நபருக்காக மற்றொரு பரிந்துரை செய்பவர் ரிவார்டு பெற முடியாது.

ரிவார்டுகள்:#

  • பரிந்துரை செய்பவர் ஒரு தகுதி பெற்ற பரிந்துரையை செய்து அவ்வாறு அழைக்கப்பட்ட நபர் பரிந்துரை இணைப்பைப் பயன்படுத்தி MFC திட்டத்தில் இணையும்போது பரிந்துரை செய்தவர் 100 மிண்டுகளை (“ரிவார்டு”) ரிவார்டாக பெற தகுதி பெறுவார். இந்த ரிவார்டு பரிந்துரை செய்பவருக்கு விதிகளை பின்பற்றி இணக்கமாக நடந்ததன் அடிப்படையில் வழங்கப்படும். ரிவார்டு, மிண்ட்கள் (100 மிண்ட்கள்) வடிவில் பரிந்துரைப்பவரின் மொபைல் செயலியில் உள்ள வாலட்டில் வரவு வைக்கப்படும்.
  • ரிவார்டுகள் சரிபார்ப்புக்கு உட்பட்டு அமையும். விசாரணை செய்யப்படுவதால் MTPL ரிவார்டு வழங்குவதை தாமதப்படுத்தலாம். ஒருவேளை தனது தனிப்பட்ட முடிவின்படி ஏதாவது பரிவர்த்தனை மோசடியானது, சந்தேகத்திற்கு இடமானது, விதிமுறைகளை மீறியது என்று நினைத்தால், அல்லது இது MTPL, அதன் துணை நிறுவனங்கள், அல்லது ஏதேனும் தொடர்புடைய அதிகாரிகள், இயக்குநர்கள், தொழிலாளர்கள் மற்றும் முகவர்களுக்கு பொறுப்புகளை ஏற்படுத்தும் என்று நினைத்தால் MTPL எந்த பரிவர்த்தனையையும் சரிபார்க்க மற்றும் செயல்முறைப்படுத்த மறுக்கவும் செய்யலாம்.
  • ஒரு தகுதிபெற்ற பரிந்துரை அல்லது ஒரு ரிவார்டு சரிபார்க்கப்பட்டதா என்ற முடிவுகள் உள்பட, அனைத்து MTPLஇன் முடிவுகளும் இறுதியானது மேலும் பிணைக்கக்கூடியதாகும்.

பொறுப்பு:#

இந்த திட்டத்தில் பங்கேற்பதன் மூலம், பரிந்துரை செய்பவர் மற்றும் அழைக்கப்பட்டவர் இதற்கு ஒப்புக்கொள்கின்றனர்:

  • இந்த விதிகளுக்கு, MTPL இன் முடிவுகள், மற்றும் MTPL இன் தனியுரிமைக் கொள்கைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்;
  • பரிந்துரைப்பவர் திட்டத்தில் பங்கேற்பதுடன் தொடர்புடைய, அதன் காரணமாக, அதனால் ஏற்பட்ட ஏதேனும் மற்றும் அனைத்து கோரல்கள், நடவடிக்கைகள், கோரிக்கைள், சேதங்கள், இழப்புகள், பொறுப்புகள், செலவுகளில் இருந்தும் (ஏதேனும் சொத்து இழப்பு, சேதம், ஏதேனும் நபருக்கு(நபர்களுக்கு) ஏற்பட்ட தனிநபர் காயம் அல்லது மரணம் மற்றும்/அல்லது திட்டம் அல்லது ஏதேனும் ரிவார்டு வழங்குதல், பெறுதல் மற்றும்/அல்லது பயன்படுத்துதல் அல்லது தவறாக பயன்படுத்துதல் ஆகியவை உள்பட, இவற்றின் வரம்பையும் கடந்து) MTPL, அதன் துணை நிறுவனங்களை மற்றும் அத்துடன் அவர்களது சம்மந்தப்பட்ட தொழிலாளர்கள், இயக்குநர்கள், அதிகாரிகள், உரிமம் பெற்றவர்கள், உரிமம் வழங்கியவர்கள், பங்குதாரர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் முகவர்கள் உள்பட, அது மட்டுமின்றி அவர்கள் சம்மந்தமான விளம்பர நிறுவனங்கள், மற்றும் திட்டத்தின் உற்பத்தி, இயக்கம் மற்றும் நிர்வாகத்துடன் சம்மந்தப்பட்ட எந்த தனிநபர் அல்லது நிறுவனங்களையும்(கூட்டாக, "விடுவிக்கப்பட்ட தரப்புகள்") பாதுகாத்தல், இழப்பீடு வழங்குதல், விடுவித்தல் மற்றும் பாதிப்பில்லாமல் வைத்திருத்தல்; மேலும்
  • பின்வரும் விஷயங்கள் காரணமாக லாபங்களில், நன்மதிப்பில் ஏற்பட்ட இழப்பு, பயன்பாடு, தரவு அல்லது இதர புலனாகாத இழப்புகள் உள்பட ஆனால் அது மட்டுமே அல்லாத ஏதேனும் நேரடி, மறைமுக, தற்செயல், சிறப்பு, விளைவாக ஏற்படுகின்ற அல்லது முன்மாதிரி சேதங்களுக்காக MTPL உங்களுக்கு பொறுப்பாகாது (அத்தகைய சேதங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது என்று MTPL க்கு அறிவுரை வழங்கப்பட்டு இருந்தாலும்):(i) திட்டத்தை பயன்படுத்தும் அல்லது பயன்படுத்த முடியாத நிலை; (ii) உங்கள் பரிமாற்றங்கள் அல்லது தரவை அங்கீகாரமின்ற அணுகுதல் அல்லது மாற்றுதல்; (iv) திட்டத்தில் அல்லது திட்டத்தின் மூலமாக ஏதேனும் மூன்றாம் தரப்பினருக்கு அறிக்கைகளை அளித்தல் அல்லது அவர்களுடன் தொடர்பில் இருத்தல்; அல்லது (v) திட்டம் சம்மந்தமான வேறு ஏதாவது விஷயம்.
  • தங்களது சொந்த பொறுப்பில்தான் திட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

மோசடி மற்றும் சந்தேகத்திற்குரிய நடத்தை#

  • ஒரு பரிந்துரை செய்பவர் ஏமாற்றுதல், ஹேக்கிங் செய்தல், மோசடி, தீங்கு ஏற்படுத்தும் செயல் அல்லது ஏதேனும் மற்ற நியாயமற்ற விளையாட்டு நடைமுறைகள் மூலமாக திட்டத்தின் நேர்மை, நியாயமான தன்மை அல்லது முறையான செயல்பாட்டினை பாதிக்கும் வகையில் ஒரு பரிந்துரை செய்பவர் நடந்து கொள்கிறார் என்று அல்லது தளத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறுவதாக MTPL தனது தனிப்பட்ட முடிவின்படி கருதினால், அல்லது MTPL தனது தனிப்பட்ட முடிவின்படி ரிவார்டுகளை வழங்குவது MTPL, அதன் துணை நிறுவனங்கள், அல்லது அவர்களது ஏதேனும் தொடர்புடைய அதிகாரிகள், இயக்குநர்கள், தொழிலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் முகவர்கள் மீது பொறுப்புத்தன்மையை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கருதினால், பரிந்துரை செய்யும் ஒரு நபர் திட்த்தில் பங்கேற்பதை அல்லது ரிவார்டு பெறுவதை MTPL தடை செய்யலாம்.
  • பரிந்துரை செய்பவர் அல்லது அழைக்கப்பட்டவர் ஒன்றுக்கும் மேற்பட்ட அல்லது பொய்யான மின்னஞ்சல் முகவரிகள் அல்லது கணக்குகள் மூலமாக திட்டத்தில் நுழையக்கூடாது, மேலும் திட்டத்தில் பங்கேற்க அல்லது ஒரு ரிவார்டை பெற கற்பனை அடையாளங்களைப் பயன்படுத்தக் கூடாது அல்லது எந்த இயந்திர முறை, பாட் அல்லது இதர சாதனம் அல்லது உக்திகளையும் பயன்படுத்தக் கூடாது.
  • ஒரு பரிந்துரை செய்பவர் உள்ளிடும் செயல்முறையில் அல்லது திட்டத்தை அல்லது தளத்தை செயல்படுத்துவதில் ஏதாவது குளறுபடி செய்வதைக் கண்டறிந்தால் அல்லது வேறு எந்த வகையிலாவது இந்த விதிமுறைகளை மீறியதைக் கண்டறிந்தால் எந்த பரிந்துரை செய்பவரையும் தகுதி நீக்கம் செய்ய மற்றும்/அல்லது எந்த ரிவார்டுகளையும் ரத்து செய்யும் அதிகாரம் MTPL -க்கு உள்ளது.

நிர்வகிக்கும் சட்டம்:#

இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இந்திய சட்டங்களின்படி நிர்வகிக்கப்படும்