Skip to main content

பயன்பாட்டு விதிமுறைகள்

Last updated: 15th December 2023

இந்த பயன்பாட்டு விதிமுறைகள் ("விதிமுறைகள்") மொஹல்லா டெக் பிரைவேட் லிமிடெட் வழங்கிய "பிளாட்ஃபார்ம்" என ஒட்டுமொத்தமாக குறிப்பிடப்படும் எங்கள் மொபைல் பயன்பாடு மற்றும் அதன் பதிப்புகள் ("ஆப்") உங்கள் பயன்பாட்டை நிர்வகிக்கிறது. "எம்டிபிஎல்", "கம்பெனி", "நாங்கள்", "எங்கள்" மற்றும் "எங்கள்"), இந்திய சட்டங்களின் கீழ் நிறுவப்பட்ட ஒரு தனியார் நிறுவனம், அதன் பதிவு அலுவலகம் மொஹல்லா டெக் பிரைவேட் லிமிடெட், நார்த் டவர் ஸ்மார்ட்வொர்க்ஸ், வைஷ்ணவி டெக் பார்க், சர்வே எண் 16/1 & எண் 17/2 அம்பலிபுரா கிராமம், வர்தூர் ஹோப்ளி, பெங்களூரு நகர்ப்புறம், கர்நாடகா - 560103.

இந்தியத் தண்டனை சட்டம், 1860, மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000, மற்றும் இவற்றில் செய்யப்படும் திருத்தங்கள் மற்றும் இவற்றின் கீழ் உருவாக்கப்படும் சட்டங்களுடன், எங்களின் சேவைகள் (நாங்கள் கீழே விரிவாக விவரித்துள்ளபடி) மற்றும் இந்த விதிமுறைகள் இணங்குகிறது. நீங்கள் எங்களின் ப்ளாட்ஃபார்மைப் பயன்படுத்தும் போது இந்த விதிமுறைகளுக்கு ஒப்புக்கொள்கிறீர்கள். இருப்பினும், இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டின் சட்டங்களுக்கும் நாங்கள் இணங்குவதாகக் குறிப்பிடவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்த விரும்பினால், உங்களின் சட்ட எல்லைக்குள் அவ்வாறு செய்ய நீங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளீர்களா என்று உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

எங்கள் ப்ளாட்ஃபார்மைப் பயன்படுத்தும் போது நீங்களும் நாங்களும் சில விதிகளைப் பின்பற்ற வேண்டும். நாங்கள் இந்த விதிகளை இந்த ஆவணத்தில் பட்டியலிட்டுள்ளோம். இந்த விதிமுறைகளையும், இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற அனைத்து ஹைப்பர்லிங்க்களையும் கவனமாகப் படிக்கவும். எங்கள் ப்ளாட்ஃபார்மைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும். மேலும், இந்தியாவுக்கு வெளியே இந்த சேவைகளை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்களின் உள்ளூர் சட்டங்களுக்கு இணங்கவும்.

விதிமுறைகள் மற்றும் சேவைகளில் செய்யப்படும் மாற்றங்கள்#

எங்கள் ப்ளாட்ஃபார்ம் மாறக்கூடியது மற்றும் விரைவாக மாறலாம். அது போலவே, நாங்கள் வழங்கும் சேவைகளை எங்கள் விருப்பப்படி நாங்கள் மாற்றலாம். பொதுவாக உங்களுக்கு, சேவைகள் அல்லது ஏதாவது அம்சங்களை வழங்குவதை, தற்காலிகமாக, அல்லது நிரந்தரமாக நாங்கள் நிறுத்தலாம்.

எந்தவொரு அறிவிப்புமின்றி எங்கள் ப்ளாட்ஃபார்ம் மற்றும் சேவைகளில் செயல்கூறுகளை நீக்குவோம் அல்லது சேர்ப்போம். எனினும், உங்களின் ஒப்புதல் தேவைப்படும் இடத்தில் நாங்கள் மாற்றங்கள் செய்தால், அது குறித்து உங்களிடம் கேட்பதை நாங்கள் உறுதி செய்வோம். எங்களின் சமீபத்திய மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து அறிந்து வைத்துக்கொள்ள அவ்வப்போது இந்தப் பக்கத்தைப் பார்வையிடுவதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

அவ்வப்போது, நாங்கள் செய்யக்கூடிய ஏதாவது மாற்றங்கள் மற்றும் சேர்க்கக்கூடிய அல்லது திருத்தி அமைக்கக்கூடிய சேவைகளைப் பார்க்க இந்தப் பக்கத்திற்கு வருகை தரவும்.

எங்கள் சேவைகள்#

எங்கள் சேவைகளை உங்களுக்கு வழங்க நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். நாங்கள் உங்களுக்கு வழங்கும் தி பிளாட்ஃபார்ம் -இன், தயாரிப்புகள், அம்சங்கள், சேவைகள், தொழில்நுட்பங்கள், மற்றும் மென்பொருள் அனைத்தும் சேவைகளில் அடங்கும். சேவைகள், பின்வரும் கூறுகளால் ஆனது (சேவைகள்):

ப்ளாட்ஃபார்ம் மூலமாக, ஏதேனும் புகைப்படங்கள், பயனர் வீடியோக்கள், ஒலி பதிவுகள் மற்றும் உங்களின் தனிப்பட்ட இசை நூலகத்திலிருந்து சேமிக்கப்பட்ட ஒலி பதிவுகள் மற்றும் சுற்றுப்புறச் சத்தம் சேர்க்கப்பட்ட வீடியோக்கள் உட்பட, அதில் பொதிந்துள்ள இசை படைப்புகள் ("பயனர் உள்ளடக்கம்") உட்பட ஆனால் அவை மட்டுமல்லாமல், உள்ளடக்கத்தைப் பதிவேற்றம் செய்ய அல்லது இடுகையிட அல்லது கிடைக்கச் செய்யப் ப்ளாட்ஃபார்மின் பயனர்களை எங்கள் ப்ளாட்ஃபார்ம் அனுமதிக்கிறது.

ப்ளாட்ஃபார்மில் ஏதாவது பயனர் உள்ளடக்கத்தை நீங்கள் வெளியிடும் போது, நீங்கள் தொடங்க வேண்டிய உள்ளடக்கத்தின் எந்தவொரு உடைமை உரிமையையும் நீங்கள் தக்கவைத்துக்கொள்கிறீர்கள். இருப்பினும், அந்த உள்ளடக்கத்தைப் பயன்படுத்த நீங்கள் எங்களுக்கு உரிமம் வழங்குகிறீர்கள்.

வரையறுக்கப்பட்ட தனிப்பட்ட அல்லது வணிக நோக்கமல்லாத பயன்பாட்டிற்காக மட்டும் அத்தகைய பயனர் உள்ளடக்கத்தைப் பகிர்வதற்கான/ தொடர்பு கொள்வதற்கான உரிமையை மற்ற பயனர்களுக்கு நீங்கள் வழங்குகிறீர்கள்.

எந்தவொரு பயனர் உள்ளடக்கமும் ரகசியமானதல்ல என்றே கருதப்படும். சேவைகளில் அல்லது சேவைகள் மூலமாக எந்தவொரு பயனர் உள்ளடக்கத்தையும் நீங்கள் இடுகையிட கூடாது அல்லது இரகசியமானது அல்லது மூன்றாம் தரப்பினருக்குரியது, அல்லது பொருந்தும் சட்டங்களை மீறுகிறது என நீங்கள் கருதும் எந்தவொரு பயனர் உள்ளடக்கத்தையும் எங்களுக்கு அனுப்பக் கூடாது.

சேவைகள் மூலம் பயனர் உள்ளடக்கத்தை நீங்கள் சமர்ப்பிக்கும் போது, அந்தப் பயனர் உள்ளடக்கம் உங்களுக்குச் சொந்தமானது என்று, அல்லது சேவைகளில் அதைச் சமர்ப்பிக்க, சேவைகளிலிருந்து பிற மூன்றாம் தரப்பு ப்ளாட்ஃபார்ம்களுக்கு அதை அனுப்ப, மற்றும்/அல்லது ஏதாவது மூன்றாம் தரப்பு உள்ளடக்கத்தை ஏற்றுக்கொள்ள, அனைத்து அனுமதிகளையும், இசைவுகளையும் அல்லது அங்கீகாரத்தையும், உள்ளடக்கத்தின் எந்தவொரு பகுதியின் உரிமையாளரிடமிருந்தும் நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்று நீங்கள் ஒப்புக்கொண்டு குறிப்பிடுகிறீர்கள்.

ஒலி பதிவின் மீது மட்டும் தான் உங்களுக்கு உரிமை உள்ளது, ஆனால் அத்தகைய ஒலி பதிவுகளில் பொதிந்துள்ள இசை படைப்புகளின் மீது உங்களுக்கு உரிமை இல்லை என்றால், பின்னர்ச் சேவைகளில் அதைச் சமர்ப்பிக்க அனைத்து அனுமதிகளையும், இசைவுகளையும் அல்லது அங்கீகாரத்தையும், உள்ளடக்கத்தின் எந்தவொரு பகுதியின் உரிமையாளரிடமிருந்தும் நீங்கள் பெற்றிருந்தாலொழிய அத்தகைய ஒலி பதிவுகளைச் சேவைகளில் நீங்கள் இடுகையிட கூடாது.

எந்தவொரு பயனர் உள்ளடக்கத்தையும் தொகுத்து வழங்க, சேமிக்க, பயன்படுத்த, காட்சிப்படுத்த, மறு உருவாக்கம் செய்ய, மாற்றியமைக்க, ஏற்றுக்கொள்ள, திருத்தியமைக்க, வெளியிட, மற்றும் பகிர, எங்களுக்கு உலகளாவிய, உரிமைத்தொகை இல்லாத, துணை உரிமம் வழங்கக்கூடிய, மற்றும் மாற்றத்தக்க உரிமத்தை நீங்கள் வழங்குகிறீர்கள். இந்த உரிமம் சேவைகளை இயக்குதல், உருவாக்குதல், வழங்குதல், ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துதல் மற்றும் புதியவற்றை ஆராய்ச்சி செய்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றின் வரையறுக்கப்பட்ட நோக்கத்திற்காக உள்ளது. எந்த வடிவிலும், ஏதாவது/அனைத்து ஊடகம் அல்லது விநியோக முறைகளிலும் (தற்போது அறியப்படுவது அல்லது பின்னர் உருவாக்கப்படுவது) பயனர் உள்ளடக்கத்திலிருந்து சார்பிய படைப்புகளை உருவாக்கவும், பயனர் உள்ளடக்கத்தை ஊக்குவிக்கவும், காண்பிக்கவும், ஒளிபரப்பவும், வழங்கவும், வெளிப்படையாகச் செயல்படுத்தவும், மற்றும் வெளிப்படையாகக் காட்சிப்படுத்தவும், ஒரு நிரந்தர உரிமத்தையும் நீங்கள் எங்களுக்கு வழங்குகிறீர்கள்.

தேவை என்கிற அளவு, பயனர் உள்ளடக்கத்தில் நீங்கள் தொன்றும் போது, பயனர் உள்ளடக்கத்தை உருவாக்கும், பதிவேற்றும், இடுகையிடும், அல்லது அனுப்பும் போது, வணிக ரீதியான அல்லது நிதியளிக்கப்பட்ட உள்ளடக்கத்துடன் தொடர்புடையவை உட்பட, உங்கள் பெயர், ஒத்தத் தன்மை, மற்றும் குரலைப் பயன்படுத்துவதற்கு, கட்டுப்பாடற்ற, உலகளாவிய, நிரந்தர உரிமை மற்றும் உரிமத்தை நீங்கள் வழங்குகிறீர்கள். சந்தைப்படுத்துதல், விளம்பரப்படுத்துதல், அல்லது எங்கள் சேவைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக எங்களால் உங்கள் தரவுகள் பயன்படுத்தப்பட்டால், -இடமிருந்து எந்த இழப்பீடும் உங்களுக்குக் கிடைக்காது என்பது இதன் பொருள் ஆகும்.

அவ்வாறு செய்ய வேண்டிய தேவை இல்லை என்றாலும், சேவைகளை வழங்குவதற்கு மற்றும் உருவாக்குவதற்கு அல்லது இந்த விதிமுறைகளை உங்கள் உள்ளடக்கம் மீறுகிறது என்று நாங்கள் கருதினால் அத்துடன் பொருந்தும் சட்டங்களால் கட்டாயமாக்கப்பட்ட நோக்கங்களுக்காக உட்பட, எந்தவொரு காரணத்திற்காகவும் எந்த நேரத்திலும் உங்கள் உள்ளடக்கத்தை நாங்கள் அணுகலாம், மதிப்பாய்வு செய்யலாம், திரையிடலாம், மற்றும் நீக்கலாம். இருப்பினும், சேவை மூலமாக நீங்கள் உருவாக்கும், பதிவேற்றம் செய்யும், இடுகையிடும், அனுப்பும், அல்லது சேமித்து வைக்கும் உள்ளடக்கத்திற்கு, நீங்கள் மட்டுமே பொறுப்பாவீர்கள்.

விளம்பர விற்பனை, நிதி அளிப்புகள், விளம்பரங்கள், பயன்பாட்டு தரவுகள் உட்பட ஆனால் அவை மட்டுமல்லாமல், சேவைகளின் உங்கள் பயன்பாட்டிலிருந்து நாங்கள் வருவாய்களை உருவாக்கலாம், நல்லெண்ணத்தை அதிகரிக்கலாம் அல்லது எங்கள் மதிப்பை அதிகரிக்கலாம், மேலும், இந்த விதிமுறைகளில் அல்லது எங்களுடன் நீங்கள் நுழைந்த மற்ற ஒப்பந்தத்தில் எங்களால் குறிப்பாக அனுமதிக்கப்பட்டிருந்தாலொழிய, அத்தகைய எந்தவொரு வருவாயிலும், நல்லெண்ணத்திலும் அல்லது மதிப்பிலும் உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் நீங்கள் ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொள்கிறீர்கள்.

இந்த விதிமுறைகளில் அல்லது எங்களுடன் நீங்கள் நுழைந்த மற்ற ஒப்பந்தத்தில் எங்களால் குறிப்பாக அனுமதிக்கப்பட்டிருந்தாலொழிய, ப்ளாட்ஃபார்மில் நீங்கள் வெளியிடும் எந்தவொரு உள்ளடக்கத்திலிருந்தும் அல்லது உங்களால் உருவாக்கப்பட்ட ஏதாவது பயனர் உள்ளடக்கத்தில் பயன்படுத்தப்படுவது உட்பட, சேவைகளில் அல்லது சேவைகளின் மூலம் உங்களுக்குக் கிடைக்கச்செய்யப்பட்ட எந்தவொரு இசை படைப்பின், ஒலி பதிவுகளின் அல்லது ஒலி-ஒளி படங்களின் பயன்பாட்டிலிருந்தும், எந்தவொரு வருமானத்தையும் அல்லது பிற சலுகையையும் பெற உங்களுக்கு உரிமை இல்லை.

நீங்கள் ஒரு இசை படைப்பின் இசையமைப்பாளர் அல்லது ஆசிரியர் என்றால் மற்றும் நிகழ்த்துதல் உரிமை நிறுவனத்துடன் இணைக்கப்பெற்றுள்ளீர்கள் என்றால், உங்களின் பயனர் உள்ளடக்கத்தில் இந்த விதிமுறைகள் மூலம் நீங்கள் எங்களுக்கு வழங்கியுள்ள உரிமத்தொகை இல்லாத உரிமம் குறித்து உங்களின் நிகழ்த்துதல் உரிமை நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். தொடர்புடைய நிகழ்த்துதல் உரிமை நிறுவனத்தின் அறிவித்தல் கடமைகளுடனான உங்கள் இணக்கத்தை உறுதி செய்வது முற்றிலும் உங்கள் பொறுப்பாகும். உங்களின் உரிமைகளை ஒரு இசை வெளியீட்டாளரிடம் நீங்கள் வழங்கியிருந்தால், உங்களின் பயனர் உள்ளடக்கத்தில் உள்ள இந்த விதிமுறைகளில் அமைக்கப்பட்டுள்ள உரிமத்தொகை இல்லாத உரிமத்தை(உரிமங்களை) வழங்க அல்லது அத்தகைய இசை வெளியீட்டாளர் எங்களுடன் இந்த விதிமுறைகளினுள் நுழைய, அத்தகைய இசை வெளியீட்டாளரிடமிருந்து ஒப்புதலை நீங்கள் பெற வேண்டும்.

ஒரு இசை படைப்பை எழுதுவது (எ.கா., ஒரு பாடலை எழுதுதல்), இந்த விதிமுறைகளின் கீழ் எங்களுக்கு உரிமம் வழங்குவதற்கான உரிமையை உங்களுக்கு வழங்காது. ஒரு பதிவு லேபிளின் கீழ் ஒரு இசை பதிவு கலைஞராக நீங்கள் இருந்தால், சேவைகளுடனான உங்கள் பயன்பாடானது, உங்கள் லேபிளால் கோரப்படக்கூடிய ஏதேனும் புதிய இசை பதிவுகளைச் சேவைகள் மூலம் நீங்கள் உருவாக்கினால் அது உட்பட, உங்களின் பதிவு லேபிளுடன் உங்களுக்கு இருக்கும் எந்தவொரு ஒப்பந்தக் கடமைகளுடனும் இணங்குவதை உறுதி செய்வது முற்றிலும் உங்கள் பொறுப்பாகும்.

எங்கள் சேவையை ஆய்வு செய்ய மற்றும் எங்கள் சேவையைச் சிறப்பாக்கவும், எங்கள் சமூகத்தின் நலனில் பங்களிப்பை வழங்குவதற்கும், ஆராய்ச்சி நோக்கத்திற்காக மூன்றாம் தரப்பினருடன் இணைந்து பணியாற்ற, எங்களிடம் இருக்கும் தகவல்களை நாங்கள் பயன்படுத்துகிறோம்.

எங்கள் சேவைகளை யார் பயன்படுத்துவது#

உங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கவும், வீடியோக்கள் மற்றும் இசையைப் பகிரவும் எங்கள் ப்ளாட்ஃபார்ம் உங்களுக்கு உதவுகிறது. உங்களுக்கு விருப்பமான உள்ளடக்கத்தை நாங்கள் புரிந்துகொண்டு, அதன்படி எங்கள் ப்ளாட்ஃபார்மில் கிடைக்கும் உள்ளடக்கத்தை எங்கள் ஆட்களின் எவ்வித ஈடுபாடுமின்றித் தானியக்க முறையில் பரிந்துரைக்கிறோம் ("சேவை/சேவைகள்").

உங்களால் எங்களுடன் ஒரு கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தில் நுழைய முடியும் மற்றும் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தச் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறீர்கள் என்றால் மட்டுமே நீங்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தலாம். ஒரு நிறுவனம் அல்லது ஏதாவது சட்ட நபர்களின் சார்பாக இந்த விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்றால், இந்த விதிமுறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் அத்தகைய நிறுவனத்தைக் கொண்டுவருவதற்கான அதிகாரம் உங்களுக்கு உள்ளது என்றும், "நீங்கள்" மற்றும் "உங்கள்" என்பது நிறுவனத்தைக் குறிப்பிடும் என்றும், நீங்கள் குறிப்பீடு மற்றும் உத்தரவாதத்தை வழங்குகிறீர்கள்.

பொருந்தும் சட்டத்தின் கீழ் எங்கள் சேவைகளைப் பயன்படுத்த நீங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளீர்களா என்பதை உறுதி செய்துகொள்ளவும்.

எங்கள் சேவைகளை எப்படிப் பயன்படுத்துவது#

எங்கள் சேவையைப் பயன்படுத்த, நீங்கள் உங்கள் மொபைல் தொலைபேசியில் வெறுமனே மொபைல் செயலியை இயக்கி, சேவைகளை எந்த மொழியில் நீங்கள் இயக்க விரும்புகிறீர்களோ அந்தப் பிராந்திய மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி அல்லது உங்கள் ஆப்பிள் ஐடி, பேஸ்புக் அல்லது உங்கள் கூகிள் ஐடி போன்ற மூன்றாம் தரப்பு சேவைகள் மூலம் பதிவு செய்யலாம். அவ்வப்போது பதிவை இயக்க பிற மூன்றாம் தரப்பு சேவைகளை நாங்கள் சேர்க்கலாம். உங்கள் தொலைபேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் நாங்கள் அனுப்பிய ஒரு முறை கடவுச்சொல்லைப் பயன்படுத்தி நீங்கள் சரிபார்க்கலாம்.

எங்கள் ப்ளாட்ஃபார்மில் கிடைக்கும் உள்ளடக்கத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்யவும், உங்களின் அனுபவத்தைச் சமூக ஊடகப் ப்ளாட்ஃபார்ம்களில் பகிரவும் நாங்கள் அனுமதிக்கிறோம்.

உங்களுக்குச் சேவைகளை வழங்குவதற்காக, நாங்கள் உங்கள் மொபைல் சாதனத்தின் சில அம்சங்களை அணுக வேண்டும்.

மொஜ் செலக்ட்#

இந்த தளத்தில் உள்ள அனைத்து ‘மொஜ் ஸ்டார் கிரியேட்டர்கள்’, அதாவது எங்கள் கூட்டாளர் படைப்பாளிகள் நீல பார்டருடன் அடையாளம் காணப்படுவார்கள் (ப்ரொபைல் படத்தில் வெள்ளை பார்டற்கு பதில் ). அத்தகைய மொஜ் செலக்ட் படைப்பாளர்களுடன் உள்ளடக்க உரிமம் அல்லது சந்தைப்படுத்தல் ஏற்பாடுகள் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடலாம்.

இணக்க தேவை#

தொடர்புடைய செய்தி மற்றும் நடப்பு விவகார வெளியீட்டாளர்கள், பொருந்தக்கூடிய விதிமுறைகளின்படி தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் தங்கள் பயனர் கணக்குகளின் விவரங்களை தளத்தில் வழங்க வேண்டும்.

பாதுகாப்பு#

ஒரு நேர்மறையான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சமூகத்தை வளர்த்து, அனைத்துப் பயனர்களுக்கும் அற்புதமான சமூக அனுபவங்களை வழங்குவது எங்கள் நோக்கமாகும். இதற்காக, பின்வருவனவற்றை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்:

  • இந்த விதிமுறைகளின் கீழ் மோசடியான, தவறாக வழிநடத்தும், சட்ட விரோதமான அல்லது தடை செய்யப்பட்ட எந்தவொரு நோக்கத்திற்காகவும் சேவைகளை நீங்கள் பயன்படுத்தமாட்டீர்கள்.

  • சேவைகளை அணுக அல்லது பிற பயனரின் தகவல்களை எடுக்க, ரோபோ, ஸ்பைடர், கிராலர், ஸ்கிராப்பர், அல்லது மற்ற ஏதாவது தானியக்க முறைகள் அல்லது இடைமுகத்தைப் பயன்படுத்த மாட்டீர்கள்.

  • சேவைகள் அல்லது மற்ற பயனரின் உள்ளடக்கம் அல்லது தகவல்களுடன் ஊடாடும் எந்தவொரு மூன்றாம் தரப்பு செயலிகளையும் எங்களின் எழுத்துப்பூர்வமான ஒப்புதலின்றிப் பயன்படுத்தவோ அல்லது உருவாக்கவோ மாட்டீர்கள்.

  • சேவைகளை முழுவதுமாக அனுபவிப்பதிலிருந்து மற்ற பயனர்களிடம் குறுக்கிடும், இடையூறு செய்யும், எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தும், அல்லது தடுக்கும் வகையில், அல்லது சேவைகளின் செயல்பாட்டைச் சேதப்படுத்தக்கூடிய, முடக்கக்கூடிய, அதிகச் சுமையை ஏற்றக்கூடிய, அல்லது பாதிக்கக்கூடிய வகையில் சேவைகளை நீங்கள் பயன்படுத்தமாட்டீர்கள்.

  • எந்தவொரு மூன்றாம் தரப்பின் எந்தவொரு அறிவுசார் சொத்துரிமையையும் மீறுவதாகக் கருதப்படக்கூடிய உள்ளடக்கத்தை நீங்கள் இடுகையிடமாட்டீர்கள்.

  • எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் உங்களை வேறொரு நபராகவோ, வேறொரு நபரின் பிரதிநிதியாகவோ பொய்யாகக் குறிப்பிடமாட்டீர்கள்.

  • வேறொரு பயனரின் கணக்கு, பயனர் பெயர், அல்லது கடவுச்சொல்லை அவர்களின் அனுமதியின்றிப் பயன்படுத்தவோ அல்லது பயன்படுத்த முயற்சிக்கவோ மாட்டீர்கள்.

  • வேறொரு பயனரிடமிருந்து உள்நுழைவு கிரெடென்ஷியல்களை நீங்கள் கோர மாட்டீர்கள்.

  • சிறியவர்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியதாகக் கருதப்படும் உள்ளடக்கத்தை நீங்கள் இடுகையிட மாட்டீர்கள். இது தொடர்பாக உள்ளடக்கம் மற்றும் சமூக வழிகாட்டுதல்களைப் பார்க்கவும்.

  • ஆபாசப் படம், கோரமான வன்முறை, மிரட்டல்கள், வெறுப்பைத் தூண்டும் பேச்சு, அல்லது வன்முறையைத் தூண்டுதல் ஆகியவற்றைக் கொண்டுள்ள அல்லது ஆகியவற்றுக்கான லிங்க்களைக் கொண்டுள்ள உள்ளடக்கத்தை நீங்கள் இடுகையிட மாட்டீர்கள்.

  • வைரஸ்கள் அல்லது பிற தீங்கிழைக்கும் குறிமுறை தொகுதியை (கோட்) நீங்கள் பதிவேற்றம் செய்ய மாட்டீர்கள் அல்லது வேறு வழியில் சேவைகளின் பாதுகாப்பைச் சமரசம் செய்ய மாட்டீர்கள்.

  • நாங்கள் பயன்படுத்தும் உள்ளடக்க வடிகட்டுதல் முறையைத் தவிர்க்கவோ, நீங்கள் அணுகுவதற்காக அங்கீகரிக்கப்படாத பகுதிகள் அல்லது சேவைகளின் அம்சங்களை அணுகவோ நீங்கள் முயற்சிக்க மாட்டீர்கள்.

  • எங்களின் சேவைகள் அல்லது ஏதாவது கணினி அமைப்பு அல்லது நெட்வொர்க்களின் பாதிப்படையும் தன்மையை நீங்கள் ஆய்வு செய்யவோ, ஸ்கேன் செய்யவோ, அல்லது சோதனை செய்யவோ கூடாது.

  • எந்த வகையிலும் அல்லது வடிவிலும், இந்தியாவின் ஒற்றுமை, நாணயம், பாதுகாப்பு, அல்லது இறையாண்மை, வெளி மாநிலங்களுடனான நட்புறவுகள், அல்லது பொது ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அல்லது பிடியாணையின்றிக் கைது செய்வதற்குரிய ஏதாவது குற்றம் புரியத் தூண்டும் அல்லது ஏதாவது குற்ற விசாரணையைத் தடுக்கும் அல்லது ஏதாவது பிற நாடுகளை இழிவுபடுத்தும் எந்தவொரு உள்ளடக்கத்தையும் நீங்கள் இடுகையிட மாட்டீர்கள்.

  • இந்த விதிமுறைகளை மீறும் எந்தவொரு நடவடிக்கையையும் நீங்கள் ஊக்குவிக்க மாட்டீர்கள் அல்லது விளம்பரப்படுத்த மாட்டீர்கள்.

  • எங்களால் செயல்படுத்தப்படும்/ அமல்படுத்தப்படும் எந்தவொரு அம்சத்தையும், செயலையும், நடவடிக்கையையும், அல்லது கொள்கையையும் நீங்கள் தவிர்க்க மாட்டீர்கள். உதாரணத்திற்கு, சேவைகளைப் பயன்படுத்துவதிலிருந்து நீங்கள் தடை செய்யப்பட்டிருந்தால், கணக்கு இடைநிறுத்தம் அல்லது உங்களுக்கு எதிராக எங்களால் எடுக்கப்படும் இது போன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்க நீங்கள் முயற்சிக்க மாட்டீர்கள்.

தனியுரிமை கொள்கை#

சேகரிக்கப்படும் தகவல்களை நாங்கள் எவ்வாறு சேகரிக்கிறோம், பயன்படுத்துகிறோம், செயலாக்கம் செய்கிறோம், பகிர்கிறோம் மற்றும் சேமிக்கிறோம் என்று தனியுரிமை கொள்கை விளக்குகிறது. சட்டத்தின் கீழ் உங்கள் உரிமைகளையும், எங்களிடம் நீங்கள் வழங்கிய தரவுகளை நீங்கள் எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்றும் தனியுரிமை கொள்கை விவரிக்கிறது.

நாங்கள் இந்தத் தகவல்களை எப்படிச் சேமிப்போம் மற்றும் பயன்படுத்துவோம் என்று தனியுரிமை கொள்கையில் விளக்கியுள்ளோம்.

தனியுரிமைக் கொள்கையின் கீழ் கூறப்பட்டுள்ளபடி, பிளாட்ஃபார்மில் மூன்றாம் தரப்பு உட்பொதிப்புகள் மற்றும் சேவைகளையும் நாங்கள் பயன்படுத்தலாம். அத்தகைய API சேவைகள் மற்றும் உட்பொதிகளின் பயன்பாடு, அத்தகைய மூன்றாம் தரப்பு சேவைகளின் கொள்கைகளால் பாதுகாக்கப்படுகிறது. அத்தகைய உட்பொதிக்கப்பட்ட அல்லது API சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், இங்கு வழங்கப்பட்டுள்ள மூன்றாம் தரப்பினரின் சேவை விதிமுறைகளுக்குக் கட்டுப்படுவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.

உங்களின் உறுதியளிப்புகள்#

பன்முகத் தன்மை கொண்ட சமூகத்திற்கு ஒரு ஆபத்தில்லாத பாதுகாப்பான சேவையை வழங்குவதற்கு நாம் அனைவரும் நம் பங்கை ஆற்றுவது அவசியமாகும். எங்கள் சேவைகளை வழங்குவதற்கான எங்கள் உறுதியளிப்பிற்குக் கைமாறாக, நீங்கள் எங்களிடம் சில உறுதியளிப்புகளை வழங்க வேண்டும். கீழே உங்களால் வழங்கப்பட்டுள்ள உறுதியளிப்புகளுடன் சேர்த்து, ப்ளாட்ஃபார்மில் உங்களால் எடுக்கப்படும் ஏதாவது நடவடிக்கையின் காரணமாக (இந்த விதிமுறைகளை மீறுதல் உட்பட) ஏற்படும் செலவுகள் மற்றும் விளைவுகளை நீங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும். எங்களின் சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், பின்வருவனவற்றை நீங்கள் ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள்:

அ. பொய்யான தகவல்கள் வழங்கப்படக் கூடாது#

எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் உங்களை வேறொரு நபராகவோ, வேறொரு நபரின் பிரதிநிதியாகவோ பொய்யாகக் குறிப்பிடமாட்டீர்கள் எங்களுக்கு தவறான தகவல்களை வழங்கினால் உங்கள் ப்ரொபைல்-ஐ நாங்கள் முடக்கலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம் அல்லது தொடர்புடைய நடவடிக்கைகளை எடுக்கலாம்..

ஆ. சாதனத்தின் பாதுகாப்பு#

எங்கள் ப்ளாட்ஃபார்ம் பாதுகாப்பாக உள்ளது என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம். இருப்பினும், ஹேக்கிங் மற்றும் வைரஸ் தாக்குதல்களால் எங்கள் ப்ளாட்ஃபார்ம் பாதிக்கப்படாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. உங்களின் மொபைல் சாதனம் மற்றும் கணினியில் அதன் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான மால்வேர் எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் இருப்பதை நீங்கள் உறுதி செய்வீர்கள்.

எங்கள் சேவைகளின் உங்கள் பயன்பாட்டைப் பாதுகாக்க எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்யும் அதே வேளையில், எங்கள் ப்ளாட்ஃபார்ம் மீதான அனைத்து வகையான தாக்குதல்கள் குறித்தும் எங்களால் சிந்திக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். உங்களின் மொபைல் சாதனம் மற்றும் கணினி தவறாகப் பயன்படுத்தப்படவில்லை அல்லது எந்த வகையிலும் சேதப்படுத்தப்படவில்லை என்று உறுதி செய்வதை நீங்கள் ஒரு நடைமுறையாகக் கொண்டிருக்க வேண்டும்.

இ. உள்ளடக்க நீக்கம் மற்றும் நிறுத்தம்#

எங்கள் பிளாட்ஃபார்மின் உங்கள் பயன்பாடு எங்கள் உள்ளடக்கம் மற்றும் சமூக வழிகாட்டுதல்களால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த உள்ளடக்க சமூக வழிகாட்டுதல்களை மீறும் உங்கள் உள்ளடக்கத்தை எங்கள் பயனர்கள் யாராவது புகாரளித்தால், எங்கள் தளத்திலிருந்து அத்தகைய உள்ளடக்கத்தை நாங்கள் அகற்றலாம். உள்ளடக்கம் மற்றும் சமூக வழிகாட்டுதல்களை மீறியதாகப் பல புகார்கள் வந்தால், எங்களுடனான உங்கள் கணக்கை நிறுத்தவும், எங்களுடன் பதிவு செய்வதிலிருந்து உங்களைத் தடுக்கவும் நாங்கள் கட்டாயப்படுத்தப்படலாம். அத்தகைய நீக்கத்திற்கு எதிராக நீங்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், grievance@sharechat.co -இல் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

உள்ளடக்கம் மற்றும் சமூக வழிகாட்டுதல்களின் கீழ் ஏதாவது உள்ளடக்கம் தடை செய்யப்பட்டிருந்தால், எங்கள் ப்ளாட்ஃபார்மில் பகிரப்பட்ட அத்தகைய எந்தவொரு உள்ளடக்கத்தையும் நாங்கள் நீக்கலாம்.

ஈ. சட்டத்திற்கு எதிரான அல்லது சட்டவிரோதமான எதற்காகவும் ப்ளாட்ஃபார்மைப் பயன்படுத்தக் கூடாது#

பல வகையான மொழிகள் மற்றும் கலாச்சாரங்கள், அத்துடன் பலவிதமான உள்ளடக்கத்திற்கு இடமளிக்கும் வகையில் எங்கள் ப்ளாட்ஃபார்ம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, உள்ளடக்கத்தின் இயல்பை வகைப்படுத்தப் பல்வேறு குறிச்சொற்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

எனவே, உங்களால் பகிரப்படும் உள்ளடக்கத்தின் இயல்பைச் சரியாகக் கண்டறிந்து, நீங்கள் அதில் சரியான முறையில் குறிச்சொற்களைச் சேர்க்க வேண்டும்.

எனினும், ஆபாசமான, ஆபாசப் படம் சார்ந்த, சிறுவர்களுக்குத் தீங்கு விளைவிக்கக்ககூடிய, பாரபட்சமான, வெறுப்பைத் தூண்டும் பேச்சு எனக் கருதப்படுவனவற்றைப் பரப்பும், எந்தவொரு நபர்களுக்கு எதிராக வன்முறை அல்லது வெறுப்பைத் தூண்டும் அல்லது ஏதாவது இந்தியச் சட்டங்களை மீறும், அல்லது ஏதாவது இந்தியச் சட்டப்படி பகிர்வதிலிருந்து தடை செய்யப்பட்ட எந்தவொரு உள்ளடக்கத்தையும் பகிர எங்கள் ப்ளாட்ஃபார்மை நீங்கள் பயன்படுத்தக்கூடாது. அத்தகைய உள்ளடக்கத்தை நீக்கும் உரிமை எங்களுக்கு உள்ளது. மேலும் விவரங்களுக்கு உள்ளடக்கம் மற்றும் சமூக வழிகாட்டுதல்கள் படிக்கவும்.

மேலே உள்ளவற்றுடன் சேர்த்து, ஏதேனும் சட்டக் கடமை அல்லது ஏதேனும் அரசாங்கக் கோரிக்கையுடன் இணக்க; உரிமைகளைப் பாதுகாக்க அல்லது எங்கள் சொத்துக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் தடுக்க, அல்லது எங்கள் வாடிக்கையாளர், அல்லது பொதுமக்களின் பாதுகாப்புக்காக; அல்லது பொதுப் பாதுகாப்பு, மோசடி, பாதுகாப்பு அல்லது தொழில்நுட்பப் பிரச்சனைகளைத் தடுக்க அல்லது தீர்த்து வைக்க, உங்களின் தனிப்பட்ட தரவுகளை அல்லது தகவல்களைப் பகிர வேண்டிய நியாயமான தேவை உள்ளது என்று நாங்கள் நன்னம்பிக்கை கொண்டிருந்தால், உரிய சட்ட அமலாக்க ஆணையங்களுடன் உங்களின் தகவல்களை நாங்கள் பகிரலாம் என்பதை நினைவில் கொள்ளவும். இருப்பினும், எங்கள் ப்ளாட்ஃபார்மைப் பயன்படுத்துவதன் மூலம் உங்களால் அல்லது உங்களுக்கு ஒரு மூன்றாம் தரப்பு அல்லது பயனரால் செய்யப்படும் எந்த செயல்களுக்கும் நாங்கள் பொறுப்பல்ல.

மக்கள் அற்புதமான சமூக அனுபவத்தில் ஈடுபடுவதற்காக நாங்கள் ஒரு ப்ளாட்ஃபார்மை உருவாக்கியுள்ளோம்; சட்டவிரோதமான உள்ளடக்கம் அல்லது சமுதாயத்தின் அல்லது சமூகத்தின் நலனுக்கு ஏதாவது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் எதையும் பகிர வேண்டாம்.

உ. உள்ளடக்க உரிமைகள் மற்றும் பொறுப்புகள்#

வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை நாங்கள் வலுவாக நம்புகிறோம், மேலும், எங்கள் ப்ளாட்ஃபார்மில் வீடியோக்களைப் பகிர நாங்கள் அனுமதிக்கிறோம். உங்களால் பகிரப்படும் எந்தவொரு உள்ளடக்கத்தின் மீதும் எங்களுக்கு உரிமை இல்லை, மேலும், உள்ளடக்கத்தின் உரிமைகள் உங்களிடம் மட்டும் தான் இருக்கும். எங்களின் அல்லது ஏதாவது மூன்றாம் தரப்பின் அறிவுசார் சொத்துரிமையை மீறுவதற்காக எங்கள் ப்ளாட்ஃபார்மை நீங்கள் பயன்படுத்தமாட்டீர்கள். அத்தகைய உள்ளடக்கம், உள்ளடக்கம் மற்றும் சமூக வழிகாட்டுதல்களுக்கு எதிரானதாகும், மேலும் அவை ப்ளாட்ஃபார்மிலிருந்து நீக்கப்படலாம். மேலும், எங்களால் உருவாக்கப்பட்ட ஏதாவது உள்ளடக்கத்தை நீங்கள் பயன்படுத்தினீர்கள் என்றால், அத்தகைய உள்ளடக்கத்தில் உள்ள அறிவுசார் சொத்துரிமைகள் தொடர்ந்து எங்களுக்குரியதாக இருக்கும்.

எங்கள் சேவைகளைப் பயன்படுத்தி உள்ளடக்கத்தைப் பகிர்வதன்/பதிவி/பதிவேற்றுவதன் மூலம்,உங்கள் உள்ளடக்கத்தை ஹோஸ்ட் செய்ய, பயன்படுத்த, விநியோகிக்க, இயக்க, நகலெடுக்க, காட்சிப்படுத்த, மொழிபெயர்க்க அல்லது உருவாக்க, பிரத்தியேகமற்ற, ராயல்டி இல்லாத, மாற்றத்தக்க, துணை உரிமம் பெற்ற, உலகளாவிய உரிமத்தை எங்களுக்கு (மற்றும் எங்கள் குழு மற்றும் துணை நிறுவனங்களுக்கு) வழங்குகிறீர்கள் ( உங்கள் தனியுரிமை மற்றும் பயன்பாட்டு அமைப்புகளுடன் இணக்கமானது) வழங்குவது போன்ற நோக்கங்களுக்காக, சேவைகளை மேம்படுத்துதல் அல்லது மேம்படுத்துதல், சந்தைப்படுத்துதல், உங்களை/சேவைகளை விளம்பரப்படுத்துதல் அல்லது எங்களால் அல்லது குழுவால் கிடைக்கப்பெறும் எந்தவொரு சேவையிலும் உங்கள் உள்ளடக்கத்தைக் காண்பித்தல். உங்கள் உள்ளடக்கம் மற்றும்/அல்லது கணக்கை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம். இதன் விளைவாக அத்தகைய பிற வகைகளிலிருந்தும் உங்களின் பயனர் உள்ளடக்கம் நீக்கப்படும். இருப்பினும், உங்கள் உள்ளடக்கம் மற்றவர்களுடன் பகிரப்பட்டிருந்தால் ப்ளாட்ஃபார்மில் அது தொடர்ந்து தோன்றக்கூடும். மேலும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உங்களின் பயனர் உள்ளடக்கத்தை நாங்கள் தக்கவைத்துக்கொள்ளலாம், இதன் மூலம் நீங்கள் உங்கள் கணக்கை மீண்டும் செயல்படுத்தத் தேர்வு செய்தால் எங்களால் உங்கள் கணக்கை மீட்டமைக்க முடியும். நாங்கள் தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம், மற்றும் உங்கள் உள்ளடக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது அல்லது நீக்குவது என்பது குறித்து மேலும் அறிய, ஷேர்சாட் தனியுரிமை கொள்கையைப் படிக்கவும்.

எங்கள் ப்ளாட்ஃபார்மில் நீங்கள் இடுகையிடும் உள்ளடக்கத்திற்கு நீங்கள் தான் முழுப் பொறுப்பாவீர்கள். எங்கள் ப்ளாட்ஃபார்மில் அல்லது எங்கள் ப்ளாட்ஃபார்ம் மூலம் பகிரப்படும் அல்லது இடுகையிடப்படும் எந்தவொரு உள்ளடக்கத்தையும் நாங்கள் வலியுறுத்துவதில்லை மற்றும் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல, மேலும் அத்தகைய பகிர்வின் காரணமாக எழும் எந்தவொரு விளைவிற்கும் நாங்கள் பொறுப்பல்ல. உங்களால் பகிரப்படும் ஏதாவது உள்ளடக்கத்தில் எங்களின் லோகோ அல்லது ஏதாவது வர்த்தகக் குறியீடு இருந்தால், அதன் பொருள், உங்களின் உள்ளடக்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம் அல்லது நிதியளிக்கிறோம் என்பதல்ல. மேலும், ப்ளாட்ஃபார்மின் மற்ற பயனர்களுடன் அல்லது ப்ளாட்ஃபார்மில் விளம்பரதாரர்களுடன் உங்களால் செய்யப்பட்ட அல்லது உள்நுழைந்த எந்தவொரு பரிவர்த்தனைகளின் விளைவுகளுக்கும் நாங்கள் பொறுப்பல்ல.

நீங்கள் பகிரும் உள்ளடக்கத்தின் உரிமையும் பொறுப்பும் எப்போதும் உங்களுடையதாகும். உங்களின் உள்ளடக்கத்தின் மீது எங்களுக்கு அறிவுசார் சொத்துரிமை உள்ளது என்று நாங்கள் எப்போதும் கோர மாட்டோம், ஆனால், எங்கள் ப்ளாட்ஃபார்மில் நீங்கள் பகிரும் மற்றும் இடுகையிடும் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கான விலையில்லா, நிரந்தர உரிமம் எங்களிடம் உள்ளது.

ஊ. இடைநபர் நிலை மற்றும் பொறுப்பு இல்லாமை#

தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகள் (இடைநபர் வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் விதித்தொகுப்பு), 2021 ஆகியவற்றின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி நாங்கள் தான் இடைநபர். தகவல் தொழில்நுட்ப (இடைநபர் வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் விதித்தொகுப்பு) விதிகள், 2021 விதி எண் 3(1) -இல் வழங்கப்பட்டுள்ள விதிகளுக்கு இணங்க இந்த விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது, இதன் படி, எங்கள் ப்ளாட்ஃபார்மின் அணுகல் மற்றும் பயன்பாட்டிற்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள், தனியுரிமை கொள்கை, மற்றும் பயன்பாட்டு விதிமுறைகள் வெளியிடப்பட வேண்டும். உங்களால் மற்றும் பிற பயனர்களால் உருவாக்கப்பட்ட அல்லது பகிரப்பட்ட உள்ளடக்கத்தைப் பதிவேற்றம் செய்யவும், பகிரவும், காட்சிப்படுத்தவும் பயனர்களுக்கு ஒரு ப்ளாட்ஃபார்மை வழங்குவது மட்டும் தான் எங்கள் பங்கு ஆகும்.

ப்ளாட்ஃபார்மில் நீங்கள் அல்லது மற்றவர்கள் செய்பவற்றை அல்லது செய்யாதவற்றை நாங்கள் கட்டுப்படுத்துவதில்லை, எனவே, அத்தகைய செயல்களின் (இணையவழியில் அல்லது இணையமற்ற முறையில்) விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. மற்றவர்களால் வழங்கப்படும் சேவைகள் மற்றும் அம்சங்களை எங்கள் சேவைகள் மூலம் நீங்கள் அணுகினாலும் அவற்றுக்கு நாங்கள் பொறுப்பல்ல. எங்கள் ப்ளாட்ஃபார்மில் நிகழும் எதற்குமான எங்கள் பொறுப்பு இந்தியச் சட்டங்களால் கண்டிப்பாக நிர்வகிக்கப்படுகிறது, மேலும் அது அந்த அளவிற்கு வரையறுக்கப்பட்டுள்ளது. சாத்தியம் என்று எங்களுக்கு தெரிந்திருந்தாலும், உங்களுக்கு அல்லது இந்த விதிமுறைகளுடன் தொடர்புடைய பிற நபருக்கு ஏற்படும் இலாபம், வருவாய்கள், தகவல்கள், அல்லது தரவுகள் ஆகியவற்றின் இழப்பிற்கு, அல்லது விளைவு சார்ந்த, பிரத்தியேகமான, மறைமுகமான, எடுத்துக்காட்டான, தண்டனைக்குரிய, அல்லது தற்செயலான சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். உங்கள் உள்ளடக்கத்தை, தகவல்களை, அல்லது கணக்கை நாங்கள் நீக்குவதும் இதில் அடங்கும்.

இந்திய சட்டத்தின் கீழ் நாங்கள் ஒரு இடைநபர். எங்கள் ப்ளாட்ஃபார்மில் மக்கள் எதை இடுகையிடுகிறார்கள் என்பதை நாங்கள் கட்டுப்படுத்துவதில்லை, ஆனால் அனைவரும் உள்ளடக்கம் மற்றும் சமூக வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

எ. ஆப் சேவைகளை இடையூறு செய்ய அல்லது இடர்ப்படுத்த நீங்கள் முயற்சிக்க மாட்டீர்கள்#

ஒரு சமூகம் சார்ந்த ப்ளாட்ஃபார்மை நாங்கள் உருவாக்கியுள்ளோம். எனவே, எங்கள் ப்ளாட்ஃபார்ம், சேவைகள், மற்றும் எங்களின் தொழில்நுட்ப வழங்கல் அமைப்புடன் குறுக்கிடாமல் இருக்க அல்லது பொதுப் பயன்பாட்டிற்கல்லாத பகுதிகளைப் பயன்படுத்தாமல் இருக்க நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். எந்தவொரு பயனர் தகவல்களுக்காகவும், ட்ரோஜன்கள், வைரஸ்கள், மற்ற ஏதாவது தீங்கிழைக்கும் மென்பொருள், ஏதாவது பாட்கள் அல்லது ஸ்க்ராப் ஆகியவற்றை எங்கள் ப்ளாட்ஃபார்மில் நீங்கள் அறிமுகப்படுத்த மாட்டீர்கள். கூடுதலாக, எங்களால் செயல்படுத்தப்பட்ட எந்தவொரு கணினி அமைப்பின், பாதுகாப்பின் அல்லது உறுதிப்படுத்தல் நடவடிக்கைகளின் பாதிப்படையும் தன்மையை நீங்கள் ஆய்வு செய்யவோ, ஸ்கேன் செய்யவோ, அல்லது சோதனை செய்யவோ மாட்டீர்கள். எங்களின் தொழில்நுட்பம் சார்ந்த வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பை நீங்கள் சேதப்படுத்தினால் அல்லது சேதப்படுத்த முயற்சித்தால், நாங்கள் உங்களின் பயனர் சுயவிவரத்தை நிறுத்திவிட்டு, எங்கள் சேவைகளிலிருந்து உங்களைத் தடை செய்வோம். அத்தகைய செயல்கள் குறித்து உரிய சட்ட அமலாக்க ஆணையங்களிடம் நாங்கள் புகாரளித்து, உங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம்.

நீங்கள் எங்கள் ப்ளாட்ஃபார்மிற்குள் ஹேக் செய்ய மாட்டீர்கள் அல்லது எவ்வகையான தீங்கிழைக்கும் மென்பொருளையும் அறிமுகப்படுத்த மாட்டீர்கள். அத்தகைய செயல்களை நீங்கள் செய்தால், நாங்கள் உங்களைப் ப்ளாட்ஃபார்மிலிருந்து நீக்கலாம், மேலும் உங்கள் நடவடிக்கைகள் குறித்துக் காவல்துறை மற்றும்/அல்லது தொடர்புடைய சட்ட ஆணையங்களிடம் புகாரளிக்கலாம்.

நீங்கள் எங்களுக்கு வழங்கும் அனுமதிகள்#

நீங்கள் இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு, சில அனுமதிகளை எங்களுக்கு வழங்குவதன் மூலம் எங்களால் உங்களுக்குச் சிறப்பாகச் சேவை செய்ய முடியும். நீங்கள் எங்களுக்கு வழங்கும் அனுமதிகள் பின்வருமாறு:

அ. மூன்றாம் தரப்பினரிடம் உங்களின் சுயவிவர தகவல்களைப் பகிர்வதற்கான அனுமதி#

எங்கள் ப்ளாட்ஃபார்மை இலவசமாக அணுகலாம் மற்றும் பயன்படுத்தலாம் என்றாலும், நாங்கள் வருவாய் ஈட்ட வேண்டும், அதன் மூலமாகத் தொடர்ந்து எங்கள் சேவைகளை எங்களால் உங்களுக்கு இலவசமாக வழங்க முடியும். இதற்கிணங்க, உங்களுக்கு ஏதாவது நிதியளிக்கப்பட்ட உள்ளடக்கம் அல்லது விளம்பரங்களைக் காட்டுவதற்காக, ப்ளாட்ஃபார்மில் உங்களின் பயனர் பெயர், சுயவிவர படங்கள், உங்களின் பயன்பாடு மற்றும் ஈடுபாட்டு பழக்கங்கள் மற்றும் பாங்குகள் உட்பட ஆனால் அவை மட்டுமல்லாமல் நாங்கள் சேகரிக்கும் எந்தவொரு தரவுகளையும் நாங்கள் பகிரலாம். எனினும், உங்களுக்கு விளம்பரப்படுத்தப்படும் ஏதாவது தயாரிப்புகளை நீங்கள் வாங்கினால் உங்களுக்கு ஏதாவது வருவாய் பங்கீட்டை வழங்குவது எங்கள் பொறுப்பல்ல. நாங்கள் எந்தவொரு தயாரிப்புகளையும் வலியுறுத்துவதில்லை அல்லது தயாரிப்புகளின் நம்பகத்தன்மைக்கு உறுதியளிப்பதில்லை. எங்கள் ப்ளாட்ஃபார்மில் பயனர்களால் தயாரிப்புகள் விளம்பரப்படுத்தப்படுவது எங்களால் வலியுறுத்தப்படுவதாகக் கருதப்படக் கூடாது.

நாங்கள் ஏதாவது முக்கியமான தனிப்பட்ட தகவல்களைப் பகிர்கிறோம் என்றால் (பொருந்தும் சட்டங்களின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள படி) அதைப் பகிர்வதற்கு முன்னர் உங்கள் ஒப்புதலை நாங்கள் கேட்போம்.

ஆ. தானியக்கப் பதிவிறக்கங்கள் மற்றும் புதுப்பிப்புகள்#

எங்கள் ப்ளாட்ஃபார்மையும் வழங்கப்படும் சேவைகளையும் நாங்கள் தொடர்ந்து புதுப்பித்து வருகிறோம். எங்கள் ப்ளாட்ஃபார்மைப் பயன்படுத்துவதற்கு, நீங்கள் உங்கள் மொபைல் சாதனத்தில் மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்து, அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும்.

உங்களின் பயன்பாட்டிற்காகச் செயலிகள் மற்றும் மென்பொருள் தொடர்ந்து புதுப்பிக்கப்படும், மேலும் ஒவ்வொரு முறை அத்தகைய புதுப்பிப்புகள் வரும்போதும் உங்கள் மொபைல் சாதனத்தில் மொபைல் செயலியின் சமீபத்திய பதிப்பை நீங்கள் நிறுவ வேண்டும்.

இ. குக்கீகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதி#

சேவைகள் மற்றும் மூன்றாம் தரப்பு வலைதளங்களின் உங்கள் பயன்பாட்டுடன் தொடர்புடைய தகவல்களைச் சேகரிக்க மற்றும் சேமிக்க, குக்கீகள், பிக்சல் குறிச்சொற்கள், வெப் பீகன்கள், மொபைல் சாதன ஐடி-கள், ஃப்ளாஷ் குக்கீகள் மற்றும் அது போன்ற கோப்புகள் அல்லது தொழில்நுட்பங்களை நாங்கள் பயன்படுத்தலாம்.

ஈ. தரவுகளைத் தக்கவைத்தல்#

ப்ளாட்ஃபார்மின் உங்கள் பயன்பாட்டுடன் தொடர்புடைய சில தகவல்களை எங்களிடம் தக்கவைத்துக்கொள்ளும் உரிமை எங்களுக்கு உள்ளது. எங்களால் உங்கள் தகவல்களின் சேகரிப்பு, செயலாக்கம், சேமிப்பு மற்றும் பயன்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடைய கூடுதல் தகவல்களுக்கு தனியுரிமை கொள்கையைப் பார்க்கவும்.

உங்களுடன் தொடர்புடைய மற்றும் உங்களால் வழங்கப்படும் தகவல்களைச் சேமிக்க, செயல்படுத்த மற்றும் தக்கவைக்க நீங்கள் எங்களுக்கு உரிமை அளிக்கிறீர்கள். மேலும் தகவல்களுக்குத் தனியுரிமை கொள்கையைப் பார்க்கவும்.

மோஜ லைவ்#

அணுகல் மற்றும் பயன்பாடு:#

இயங்குதளத்தின் பிளாட்ஃபார்ம் ஒரு பகுதியாக, உங்களின் நிகழ்நேர வீடியோக்களை பிளாட்ஃபார்மில் ("லைவ்ஸ்ட்ரீம்") ஒளிபரப்ப அனுமதிக்கும் அம்சத்தை நாங்கள் வழங்குகிறோம். லைவ்ஸ்ட்ரீம் அம்சத்தைப் பயன்படுத்தி நீங்கள் பதிவேற்றிய அனைத்து உள்ளடக்கமும் இந்த பயன்பாட்டு விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் மற்றும் உள்ளடக்கம் மற்றும் சமூக வழிகாட்டுதல்களுக்கு ("சமூக வழிகாட்டுதல்கள்") உட்பட்டது. எந்தவொரு லைவ்ஸ்ட்ரீமையும் உடனடியாக அகற்றவோ அல்லது இடைநிறுத்தவோ மற்றும்/அல்லது தொடர்புடைய பிற நடவடிக்கைகளை எடுக்கவோ எங்களுக்கு உரிமை உள்ளது.

உங்களுக்கு எதிராக ஏதேனும் அகற்றுதல்/நிறுத்தம்/தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், 'மீறல்கள்' பக்கத்தின் கீழ் (பிளாட்ஃபார்மில் உள்ள உதவி & ஆதரவு தாவலில்) ஆப் - இல் உள்ள முறையீடு முறையின் மூலம் நீங்கள் மேல்முறையீடு செய்யலாம் அல்லது எங்களுக்கு எழுதலாம். support@sharechat.co இல்.

மேலும் குறிப்புக்கு https://help.mojapp.in/policies/ இல் கிடைக்கும் சமூக வழிகாட்டுதல்கள் மற்றும் பிற கொள்கைகளைப் பார்க்கவும்.

உங்களைப் பின்தொடர்பவர்களும் பிற பயனர்களும் உங்களுடன் தொடர்பு கொள்ளலாம் மற்றும் நீங்கள் ஒளிபரப்பிய லைவ்ஸ்ட்ரீம் குறித்து கருத்து தெரிவிக்கலாம். நாங்கள், அவ்வப்போது, லைவ்ஸ்ட்ரீம் அம்சத்தின் செயல்பாட்டைச் சேர்க்கலாம், அகற்றலாம் அல்லது மாற்றலாம். லைவ்ஸ்ட்ரீம் என்பது எங்கள் பிளாட்ஃபார்மில் வளர்ந்து வரும் அம்சமாகும், மேலும் லைவ்ஸ்ட்ரீம் அம்சத்தின் தற்போதைய பண்புகளை அவ்வப்போது சேர்க்கலாம்/அகற்றலாம் அல்லது மாற்றலாம். நாங்கள் கீழ்கண்ட எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை:

அ. லைவ்ஸ்ட்ரீம் அம்சம் பிழையின்றி இருக்கும் அல்லது எப்போதும் உங்கள் பயன்பாட்டிற்கு கிடைக்கும்,

ஆ. லைவ்ஸ்ட்ரீம் அம்சத்தின் அனைத்து செயல்பாடுகளும் எல்லா நேரங்களிலும் கிடைக்கும்

இ. லைவ்ஸ்ட்ரீம் அம்சத்தைப் பயன்படுத்தி பிற பயனர்கள் இடுகையிடும் எந்த உள்ளடக்கமும் துல்லியமாக இருக்கும்.

இருப்பினும், Moj உள்ளடக்கம் மற்றும் சமூக வழிகாட்டுதல்களின் கீழ் தடைசெய்யப்பட்ட உள்ளடக்கத்தைப் பதிவேற்ற, அம்சத்தை நீங்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. லைவ்ஸ்ட்ரீமில் உங்களுக்கு தேவையான உரிமைகள் உள்ள மற்றும் மூன்றாம் தரப்பினருக்கு சொந்தமான பதிப்புரிமை அல்லது பிற அறிவுசார் சொத்துரிமைகளை மீறாத உள்ளடக்கத்தை மட்டுமே பகிருமாறு உங்களை ஊக்குவிக்கிறோம். மூன்றாம் தரப்பு அறிவுசார் சொத்துரிமைகளை மீறக்கூடிய பதிப்புரிமை பெற்ற இசையைக் கொண்ட உள்ளடக்கத்தை நேரடியாக ஸ்ட்ரீம் செய்வது அல்லது பதிவேற்றுவது எங்களின் உள்ளடக்கம் மற்றும் சமூக வழிகாட்டுதல்களை மீறுவதாகும்.

பிளாட்ஃபார்மில் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, வயதுக்குட்பட்ட பயனர்களால் ஹோஸ்ட் செய்யப்படும் லைவ்ஸ்ட்ரீம் கருத்துகளை நாங்கள் முடக்கலாம்.

ஸ்பான்சர் செய்யப்பட்ட/விளம்பரப்படுத்தப்பட்ட உள்ளடக்கம்:#

எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் மற்றும் பொருந்தக்கூடிய பிற சட்டங்களுடன், நீங்கள் லைவ்ஸ்ட்ரீமில் ஏதேனும் உள்ளடக்கத்தை விளம்பரப்படுத்தினால் அல்லது ஸ்பான்சர் செய்கிறீர்கள் என்றால், பின்வருவனவற்றை வரம்பில்லாமல் உறுதிப்படுத்தவும்:

அ. Moj அப்ளிகேஷன் மூலம் (லைவ்ஸ்ட்ரீமில் கிடைக்கும் ‘பணம் செலுத்திய ஊக்குவிப்பு’ விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம்) அல்லது மற்றபடி ஸ்பான்சர் செய்யப்பட்ட/விளம்பரப்படுத்தப்பட்ட உள்ளடக்கத்தைப் பற்றி பயனர்களுக்குத் தெரிவிக்கிறீர்கள்

ஆ. லைவ்ஸ்ட்ரீமில் உள்ள உள்ளடக்கம் தொடர்பாக நீங்கள் எந்த பொய்யான/தவறாக வழிகாட்டும்/தவறான அறிக்கைகளையும் வெளியிடக்கூடாது

இ. தீங்கு விளைவிக்கும்/சட்டவிரோத பொருட்கள் மற்றும்/அல்லது சேவைகளை நீங்கள் விளம்பரப்படுத்தக் கூடாது.

டிஜிட்டல் மீடியாவில் இன்ஃப்ளூயன்சர் விளம்பரத்திற்கான எ.எஸ்.சி.ஐ வழிகாட்டுதல்களைப் பார்க்கவும் மேலும் எந்தவொரு ஸ்பான்சர் செய்யப்பட்ட உள்ளடக்கத்திற்கான உங்கள் சட்டப்பூர்வக் கடமைகளைப் புரிந்து கொள்ள உங்கள் விளம்பரதாரரைத் தொடர்பு கொள்ளவும்.

அறிக்கையிடல் நடவடிக்கைகள்:#

ஒரு பொறுப்பான பயனராக, தயவு செய்து ஏதேனும் லைவ்ஸ்ட்ரீமைக் கொடியிடவும்/அறிவிக்கவும் அல்லது நீங்கள் காணும் லைவ்ஸ்ட்ரீம் மீது கருத்து தெரிவிக்கவும், அது பொருந்தக்கூடிய சட்டங்கள், சமூக வழிகாட்டுதல்கள் அல்லது பயன்பாட்டு விதிமுறைகளை மீறுவதாக இருக்கலாம். இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது பிளாட்ஃபார்மில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் சிறந்த அனுபவத்தை உறுதி செய்யும். லைவ்ஸ்ட்ரீம் தவறான அல்லது புண்படுத்தும் கருத்தைப் புகாரளிக்க மற்றும்/அல்லது லைவ்ஸ்ட்ரீமையே புகாரளிக்க, பயன்பாட்டில் உள்ள அறிக்கையிடல் பொறிமுறையைப் பயன்படுத்தலாம். இதுபோன்ற மீறல்களை support@sharechat.co என்ற மின்னஞ்சல் முகவரியிலும் நீங்கள் புகாரளிக்கலாம்.

பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மற்றும் சம்பவ விசாரணைகளுக்கு இணங்குவதற்கான நோக்கங்களுக்காக உங்கள் லைவ்ஸ்ட்ரீமை இருபத்தி ஒரு (21) நாட்களுக்கு தற்காலிகமாக பதிவுசெய்து சேமிப்போம் என்பதை நினைவில் கொள்ளவும். லைவ்ஸ்ட்ரீமில் எந்த அறிக்கையும் இல்லை எனில், இந்த ரெக்கார்டிங்குகளை இருபத்தி ஒரு (21) நாட்கள் முடிந்த பிறகு நீக்கலாம். எவ்வாறாயினும், சட்ட அதிகாரிகள் மற்றும் சட்ட அமலாக்க வழிமுறைகளுடன் ஒத்துழைப்பதற்காக நாங்கள் அதை இன்னும் நீண்ட காலத்திற்கு சேமிக்கலாம்.

எங்கள் ஒப்பந்தம் மற்றும் நாங்கள் உடன்பட மறுத்தால் என்ன நடக்கும்#

அ. இந்த விதிமுறைகளின் கீழ் யாருக்கு உரிமைகள் உள்ளது#

இந்த விதிமுறைகளின் கீழ் உரிமைகள் மற்றும் கடமைகள் உங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, மேலும் அவை எங்கள் ஒப்புதலின்றி எந்தவொரு மூன்றாம் தரப்புக்கும் ஒதுக்கப்படக் கூடாது. இருப்பினும், இந்த விதிமுறைகளின் கீழ் எங்களின் உரிமைகள் மற்றும் கடமைகளைப் பிறருக்கு ஒதுக்க நாங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளோம். உதாரணத்திற்கு, நாங்கள் மற்றொரு நிறுவனத்துடன் இணையும் போது மற்றும் புதிதாக ஒரு நிறுவனத்தை உருவாக்கும் பொது இது நடக்கலாம்.

ஆ. சச்சரவுகளை நாங்கள் எவ்வாறு கையாளுவோம்#

அனைத்துச் சூழ்நிலைகளிலும், சச்சரவுகள் இந்தச் சட்டங்களுக்கு உட்பட்டது என்றும், அத்தகைய அனைத்துச் சச்சரவுகள் மீதும் பெங்களூர் நீதிமன்றங்களுக்குப் பிரத்தியேக அதிகார எல்லை உள்ளது என்றும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

குறை தீர்க்கும் செயல்முறை#

எங்கள் பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கான எங்கள் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, எங்கள் பயனர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க அரசாங்க அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுகிறோம். நாங்கள் ஒரு குறைதீர்ப்பு அதிகாரியை நியமித்துள்ளோம், ஒரு பயனருக்கு பிளாட்ஃபார்மில் தங்களின் அனுபவம் குறித்து ஏதேனும் கவலை இருந்தால் அவரை நேரடியாகத் தொடர்புகொள்ள முடியும். பிளாட்ஃபார்ம் தொடர்பாக உங்களால் எழுப்பப்படும் ஏதேனும் கவலைகள் அல்லது புகார்களைத் தீர்க்க உதவும் வகையில் வலுவான குறை தீர்க்கும் பொறிமுறையை நாங்கள் ஒன்றாக இணைத்துள்ளோம்.

குறைகளைத் தீர்ப்பதற்கான பல்வேறு வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:#

  1. நீங்கள் பயனர் ப்ரோபைல்களை புகாரளிக்கலாம் மற்றும் எங்கள் சமூக வழிகாட்டுதல்களை மீறும் உள்ளடக்கத்திற்கான புகார்களை எழுப்பலாம். புகாரைச் சமர்ப்பிக்க பயனர் ப்ரோபைலுக்கு அடுத்துள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து புகார் செய்யலாம். நீங்கள் சரியான காரணத்தைத் தேர்ந்தெடுத்து புகார் விருப்பத்தை கிளிக் செய்யலாம். அம்புக்குறி ஐகானைக் கிளிக் செய்து வீடியோவைப் புகாரளிக்கலாம் (வீடியோவின் வலது பக்கத்தில் உள்ளது) அதற்கான புகாரை சமர்ப்பிக்கலாம். நீங்கள் கருத்துகளைத் திறந்து, அதைப் புகாரளிக்க கருத்தை தொடர்ந்து அழுத்தவும். ப்ரோஃபைல் செட்டிங் டாப் கீழ் இருக்கும் ரிப்போர்ட் பக்கத்தில் உங்களின் புகாரின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

  2. உங்களுக்கு எதிராக அல்லது நீங்கள் பதிவேற்றிய உள்ளடக்கத்திற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டிருந்தால், ப்ரோஃபைல் செட்டிங் டாப் கீழ் இருக்கும் மீறல்கள் பக்கத்தில் விவரங்களைப் பார்க்கலாம். மீறல்கள் பக்கத்தில் உங்கள் மேல்முறையீட்டை உறுதிப்படுத்த, மேல்முறையீட்டைப் பதிவுசெய்து கருத்துகளைச் சேர்க்கலாம்.

  3. https://support.sharechat.com/ இணையதளத்தில் இருக்கும் சாட்போட் (ChatBot) பொறிமுறை மூலமாகவும் உங்கள் புகாரைப் புகாரளிக்கலாம்.

  4. உங்கள் கவலை மற்றும் புகார்களை contact@sharechat.co மற்றும் grievance@sharechat.co என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பலாம்.

  5. தானியங்கி உருவாக்கிய ஒரு டிக்கெட் எண்ணைப் பெறுவீர்கள், மேலும் எழுப்பப்படும் புகார் அல்லது கவலையின் மீதான நடவடிக்கைகள் அரசாங்க விதிமுறைகளுக்கு மற்றும்கொள்கைகளுக்கு ஏற்ப எடுக்கப்படும்.

  6. எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள், எங்கள் மாதாந்திர வெளிப்படைத்தன்மை அறிக்கையில் தொகுக்கப்பட்டு வழங்கப்படும். அதை இங்கு காணலாம் https://help.mojapp.in/transparency-report

பின்வரும் கொள்கைகள் அல்லது இது தொடர்பாக உங்களுக்கு இருக்கும் வேறு ஏதேனும் சந்தேகங்களை தீர்க்க நீங்கள் குறைதீர்க்கும் அதிகாரியைத் தொடர்பு கொள்ளலாம்:

A. சேவை விதிமுறைகள்
B. தனியுரிமைக் கொள்கை
C. உங்கள் அக்கவுண்ட் பற்றிய கேள்விகள்

தரவு/தகவல் பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் பிளாட்ஃபார்ம் பயன்பாட்டுக் கவலைகள் தொடர்பான உங்கள் கவலைகளை நிவர்த்தி செய்ய எங்களிடம் ஒரு குறைதீர்ப்பு அதிகாரி இருக்கிறார். நீங்கள் எழுப்பிய பிரச்சினைகளுக்கு 15 (பதினைந்து) நாட்களுக்குள் தீர்வு காணப்படும். நீங்கள் எங்களைத் தொடர்புகொள்வதற்கும் உங்கள் சிக்கல்களை தீர்ப்பதற்கும் நாங்கள் ஒரு முறையை உருவாக்கியுள்ளோம்.

பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் குறைதீர்ப்பு அலுவலரைத் தொடர்பு கொள்ளலாம்:

Ms. ஹர்லீன் சேத்தி
முகவரி: மொஹல்லா டெக் பிரைவேட் லிமிடெட்,
நார்த் டவர் ஸ்மார்ட்வொர்க்ஸ், வைஷ்ணவி டெக் பார்க்,
சர்வே எண் 16/1 & எண் 17/2 அம்பலிபுரா கிராமம், வர்தூர் ஹோப்ளி,
பெங்களூரு நகர்ப்புறம், கர்நாடகா - 560103
அலுவலக நேரம்: காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை
இ-மெயில்: grievance@sharechat.co
குறிப்பு - குறைகளை விரைவாகச் செயல்படுத்தி தீர்க்க, மேலே குறிப்பிட்டுள்ள இ-மெயில் ஐடிக்கு பயனர் தொடர்பான அனைத்து குறைகளையும் அனுப்பவும்.

நோடல் தொடர்பு நபர் - திருமதி ஹர்லீன் சேத்தி
இ-மெயில்: nodalofficer@sharechat.co
குறிப்பு - இந்த மின்னஞ்சல் காவல்துறை மற்றும் விசாரணை நிறுவனங்களால் மட்டுமே பயன்படுத்தப்படும். பயனர் தொடர்பான சிக்கல்களுக்கு இது சரியான மின்னஞ்சல் ஐடி அல்ல.
பயனர் தொடர்பான அனைத்து குறைகளுக்கும், தயவுசெய்து எங்களை grievance@sharechat.co இல் தொடர்பு கொள்ளவும்

பொறுப்பிற்கான வரம்பு#

ஏதாவது தகவல்களின் துல்லியமின்மை அல்லது முழுமையின்மையின் காரணமாக அல்லது ப்ளாட்ஃபார்மின் ஏதாவது பயனரின் நடவடிக்கையால் ஏதாவது உத்தரவாதம் மீறப்படுவதன் காரணமாக, நேரடியாக அல்லது மறைமுகமாக எழும், எந்தவொரு இழப்பு அல்லது சேதம் தொடர்புடையதாக எந்தவொரு பொறுப்பையும் நாங்கள் ஏற்கவில்லை.

எழுத்துப்பூர்வமாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலொழிய, வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு குறிப்பீடுகளும் அல்லது உத்தரவாதங்களுமின்றிப் ப்ளாட்ஃபார்ம் மற்றும் சேவைகள் "இருப்பது போல" மற்றும் "கிடைப்பதின் படி" என்ற அடிப்படையில் வழங்கப்படும். சேவைகள் மற்றும் ப்ளாட்ஃபார்மின் தடையற்ற, சரியான நேரத்திலான, பாதுகாப்பான அல்லது பிழையற்ற வழங்கல், எந்தச் சாதனத்திலும் தொடர்ந்து பொருந்தக்கூடிய தன்மை, அல்லது ஏதாவது பிழைகளின் திருத்தம் உட்பட, சேவைகள் மற்றும் ப்ளாட்ஃபார்மின் தரத்திற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கவில்லை.

எந்தச் சூழ்நிலையிலும், வேறொரு பயனரால் விதிமுறைகள் மீறப்படுவது அல்லது ஏதாவது சேவை அல்லது ப்ளாட்ஃபார்மைப் பயன்படுத்துவதின் அல்லது நம்பியிருப்பதின் விளைவாக ஏற்படும் ஏதாவது பிரத்தியேகமான, தற்செயலான, தண்டனைக்குரிய, னேரடியான, மறைமுகமான அல்லது விளைவு சார்ந்த சேதங்களுக்கு நாங்கள், அல்லது எங்களின் ஏதாவது துணை நிறுவனங்கள், பின்வருபவர்கள், மற்றும் நியமனதாரர்கள், மற்றும் அவர்களின் ஒவ்வொரு முதலீட்டாளர்கள், இயக்குநர்கள், அதிகாரிகள், பணியாளர்கள், முகவர்கள், சேவை வழங்குநர்கள், மற்றும் விநியோகஸ்தர்கள் பொறுப்பல்ல.

ஏதாவது காரணத்திற்காக இங்குள்ள ஏதாவது விலக்கு செல்லாது எனக் கருதப்படுகிறது மற்றும் இழப்பு அல்லது சேதத்திற்கு நாங்கள் அல்லது எங்களின் ஏதாவது துணை நிறுவனங்கள், அதிகாரிகள், இயக்குநர்கள் அல்லது பணியாளர்கள் பொறுப்பானால், பின்னர், கோரிக்கை தேதியின் முந்தைய மாதத்தில் ப்ளாட்ஃபார்ம் அல்லது சேவைகளின் பயன்பாட்டிற்காக எங்களிடம் செலுத்தப்பட்ட கட்டணங்கள் அல்லது தொகைகளை விட மிகையாகாமல் அத்தகைய பொறுப்பு இருக்கும்.

இழப்பீடு#

பின்வருவனவற்றின் காரணமாக எழும் எந்த வகையான எந்தவொரு உரிமை கோரல், சட்ட நடவடிக்கை, இழப்பு, சேதம், பொறுப்பு, செலவு, தேவை அல்லது செலவினத்திலிருந்து (வழக்கறிஞர் கட்டணங்கள் உட்பட ஆனால் அவை மட்டுமல்லாமல்) எங்களையும், எங்கள் துணை நிறுவனங்களையும், இணை நிறுவனங்களையும், முகவர்களையும், அவர்களின் அந்தந்த அதிகாரிகளையும், இயக்குநர்களையும், ஊழியர்களையும், பின்வருவோரையும், மற்றும் நியமனதாரர்களையும், இழப்பீடளித்து, பாதுகாத்து, பாதிப்பில்லாமல் வைத்திருப்பதாக நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்: (i) ப்ளாட்ஃபார்ம் அல்லது சேவைகளுக்கான உங்கள் அணுகல் அல்லது பயன்பாடு; (ii) இந்த ஒப்பந்தத்தின் கீழ் உள்ள உங்கள் கடமைகளை மீறுதல்; (iii) அறிவுசார் சொத்து, அல்லது ஏதாவது தனியுரிமை அல்லது நுகர்வோர் பாதுகாப்பு உரிமை உட்பட, ஏதாவது மூன்றாம் தரப்பின் உரிமைகளை நீங்கள் மீறுதல்; (iv) சட்டம் அல்லது ஒப்பந்தக் கடமைகளின் ஏதாவது மீறல் மற்றும் அத்தகைய மீறல் தொடர்புடைய ஏதாவது உரிமை கோரல்கள், கோரிக்கைகள், அறிவிப்புகள்; (v) உங்கள் அலட்சியம் அல்லது வேண்டுமென்றே தவறாக நடந்துகொள்வது. எங்கள் விதிமுறைகளின் நிறுத்தத்திலிருந்து இந்தக் கடமைகள் பிழைக்கும்.

கோரப்படாத உள்ளடக்கம்#

கருத்து அல்லது பிற பரிந்துரைகளுக்கு நாங்கள் எப்போதும் மதிப்பளிக்கிறோம். உங்களுக்கு இழப்பீடு அளிக்கவேண்டும் என்ற எந்தவொரு கட்டுப்பாடுகளும் அல்லது கடமைகளுமின்றி அவற்றை நாங்கள் பயன்படுத்தலாம், மேலும், அவற்றை இரகசியமாக வைத்திருக்க வேண்டிய கடமையும் இல்லை.

பொதுவானவை#

  1. இந்த ஆப்-இன் முந்தைய பதிப்புகளின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ், ஆப்-இன் வேறு எந்த வழங்குநராலும் வழங்கப்பட்ட உரிமைகள் மற்றும் கடமைகள் மொஹல்லா குழுவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளின் ஏதாவது அம்சத்தை அமல்படுத்த முடியவில்லை என்றால், மீதமுள்ளவை அமலில் இருக்கும்.
  2. எங்கள் விதிமுறைகளில் செய்யப்படும் எந்தவொரு திருத்தங்களும் அல்லது தள்ளுபடிகளும் எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும் மற்றும் எங்களால் கையொப்பமிடப்பட வேண்டும்.
  3. ஏதாவது சட்டவிரோதமான அல்லது அனுமதிக்க முடியாதது நடவடிக்கையை உரிய சட்ட அமலாக்க ஆணையங்களிடம் தெரிவித்தல் அல்லது தடுத்தல் அல்லது உங்கள் சுயவிவரத்தை இடைநிறுத்தம் செய்தல் உள்ளிட்ட, இந்த விதிமுறைகளின் ஏதாவது அம்சத்தை நாங்கள் அமல்படுத்தத் தவறினால், அவ்வாறு எங்கள் உரிமைகளை அமல்படுத்தத் தவறுவது அந்த உரிமைகள் எங்களால் தள்ளுபடி செய்யப்பட்டதாக ஆகாது.
  4. உங்களுக்கு வெளிப்படையாக வழங்கப்படாத அனைத்து உரிமைகளும் எங்களிடம் உள்ளது.